/* */

8 வழிச்சாலை திட்டத்தை கைவிடக் கோரி விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சென்னை-சேலம் இடையே திருவண்ணாமலை மாவட்டம் வழியாக 8 வழிச்சாலை அமைக்கும் திட்டத்தை கைவிடக் கோரி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

HIGHLIGHTS

8 வழிச்சாலை திட்டத்தை கைவிடக் கோரி விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
X

சென்னை- சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை கைவிடக் கோரி திருவண்ணாமலையில் ஆர்ப்பாட்டத்தி ஈடுபட்ட  விவசாயிகள் சங்கத்தினர்.

சென்னை-சேலம் இடையே திருவண்ணாமலை மாவட்டம் வழியாக 8 வழிச்சாலை அமைக்கும் திட்டத்துக்கு பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனை வலியுறுத்தி திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு 8 வழிச்சாலை எதிர்ப்பு இயக்க கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அபிராமன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் பலராமன், செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள, ''சென்னை- சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை அரசு கைவிட வேண்டும். 8 வழி சாலை திட்டத்திற்கு 6 வழிச்சாலை, பசுமை வழிச்சாலை என வேறு பெயர் சூட்டி மக்களை ஏமாற்றக் கூடாது. சென்னை- சேலம் இடையே எந்த புதிய சாலையும் வேண்டாம். இருக்கும் சாலைகளை அகலப்படுத்தி இயற்கை மற்றும் விவசாயத்தை காப்பாற்ற வேண்டும்'' என்று கோஷங்கள் எழுப்பினர்.

ஒருங்கிணைப்பாளர் அபிராமன் கூறுகையில், ''8 வழி சாலை திட்டத்தை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று தேர்தல் அறிக்கையில் தெரிவித்த தி.மு.க. அரசாங்கம் ஆட்சி அமைத்தபின் தன்னுடைய நிலையை மாற்றி கொண்டதா என்ற பெருத்த சந்தேகம் தற்போது எழுந்து உள்ளது.

தற்போது சட்டமன்றம் நடைபெற்று கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில் முதல்- அமைச்சர் பதில் சொல்ல வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. 6 வழிச்சாலை, பசுமை வழிச்சாலை, விரைவு சாலை என்று எந்த பெயரிலும் 8 வழிச்சாலையை நாங்கள் அனுமதிக்கமாட்டோம். அதேவேளையில் இருக்கும் சாலையை அகலப்படுத்தி அதிவிரைவு சாலைகளை அமைத்து கொள்ள பொதுமக்களும், விவசாயிகளும் தயாராக இருக்கிறோம். எனவே அரசாங்கம் இந்த திட்டத்தை முழுமையாக கைவிட வேண்டும். மேலும் சட்டமன்றத்தில் முதல்- அமைச்சர் 8 வழிச்சாலையை கொண்டு வர மாட்டோம் என்று தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்'' என்றார்.

இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட தலைவர் சிவக்குமார், செயற்குழு உறுப்பினர்கள் ராமதாஸ், வீரபத்திரன், செல்வம், 8 வழிச்சாலை துணை ஒருங்கிணைப்பாளர்கள் அழகேசன், பச்சையப்பன், கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 10 May 2022 7:45 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  2. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  3. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  4. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  5. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  6. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  7. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  9. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  10. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...