/* */

திருவண்ணாமலை மாவட்ட சுகாதார ஆய்வாளர் பணியில் போலி சான்றுகள்

திருவண்ணாமலை மாவட்ட சுகாதார ஆய்வாளர் பணியில் சேர்ந்த 49 பேரின் சான்றுகள் போலி மற்றும் தகுதியில்லாதவை என தெரியவந்துள்ளது.

HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்ட சுகாதார ஆய்வாளர் பணியில் போலி சான்றுகள்
X

பைல் படம்.

திருவண்ணாமலை மாவட்ட சுகாதார ஆய்வாளர் பணியில் சேர்ந்த விவகாரத்தில் 49 பேரின் சான்றுகள் போலி மற்றும் தகுதியில்லாதவை என தெரியவந்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பரவலின் போது திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகள் முழுவதுமாக நிரம்பின. எனவே, இடபற்றகுறையால் கல்லூரி வளாகங்கள் மற்றும் பள்ளிகள் போன்ற இடங்களில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்கள் தொடங்கப்பட்டது.

அப்போது கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுவதற்காக அவுட் சோர்சிங் முறையில், இரண்டாம் நிலை சுகாதார ஆய்வாளர்கள் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட்டனர். அதன்படி, செய்யாறுவுக்கு உட்பட்ட பகுதிகளில் 54 சுகாதார ஆய்வாளர்கள் பணி நியமனம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்றது. சுகாதாரத்துறை அதிகாரிகள் இந்த பணி நியமனத்தை நேரடி நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அதன்படி, செய்யாறு சுகாதார மாவட்டத்தில் 54 சுகாதார ஆய்வாளர்கள் கடந்த ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில், சுகாதார ஆய்வாளராக பணியில் சேர்ந்த பலரும் போலியான மருத்துவ சான்று கொடுத்து பணியில் சேர்ந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக, சுகாதார துணை இயக்குநர் சங்கீதா, திருவண்ணாமலை எஸ்பி பவன்குமாரிடம் கொடுத்த புகாரில், போலி சான்று கொடுத்து பணியில் சேர்ந்தவர்கள் மற்றும் உடந்தையாக இருந்தவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். சுகாதார ஆய்வாளர் பணியில் சேர்ந்தவர்கள் அளித்த மருத்துவ கல்வி சான்றுகளின் உண்மைத்தன்மை ஆய்வு செய்யப்பட்டது. அதில், 5 நபர்களின் சான்றுகள் மட்டுமே அரசு நிர்ணயித்த தகுதியுடன், அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் முறையாக 2 ஆண்டுகள் துணை மருத்துவ படிப்பு முடித்திருப்பது தெரிய வந்துள்ளது. மேலும், 32 பேர் மருத்துவ படிப்பே படிக்காமல், துணை மருத்துவ படிப்பு முடித்ததாக போலி சான்று கொடுத்து பணியில் சேர்ந்துள்ளனர்.

மேலும், 17 பேர் அங்கீகாரம் இல்லாத நிறுவனங்களில் 6 மாதம் மற்றும் ஒரு ஆண்டு பயிற்சி முடித்துவிட்டு பணியில் சேர்ந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டாலும் சான்றிதழ் சரிபார்த்தல், நேர்காணல் ஆகியவற்றை சுகாதாரத்துறை அதிகாரிகள்தான் செய்துள்ளனர்.

எனவே, சான்றிதழ்கள் போலி மற்றும் தகுதியில்லாதது என தெரிந்திருந்தும் பணியில் சேர்த்தது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது. எனவே, இந்த பணி நியமனத்துக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் பணி நியமன ஆணை வழங்கிய அதிகாரிகளிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.

Updated On: 25 Aug 2021 5:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  2. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  3. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  4. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  5. ஈரோடு
    மூளைச்சாவு அடைந்த நாமக்கல் கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம்
  6. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  7. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  8. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  9. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  10. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா