/* */

மாவட்டத்தில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீா் திட்டம் விரைந்து நிறைவேற்றம்: கலெக்டர் முருகேஷ்

Drinking Water Supply- மாவட்டத்தில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீா் திட்டம்

HIGHLIGHTS

மாவட்டத்தில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீா் திட்டம் விரைந்து நிறைவேற்றம்: கலெக்டர் முருகேஷ்
X

கிராம சபை கூட்டத்தில் தலைமை வகித்து பேசிய மாவட்ட ஆட்சியர் முருகேஷ்.

Drinking Water Supply- நாட்டின் 75-ஆவது சுதந்திர தினவிழாவையொட்டி, திருவண்ணாமலையை அடுத்த தென்மாத்தூா் ஊராட்சி, சு.கீழ்நாச்சிப்பட்டு கிராமத்தில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் முருகேஷ் தலைமை வகித்துப் பேசுகையில் கூறியதாவது:

திருவண்ணாமலை மாவட்டத்தின் 860 கிராம ஊராட்சிகளிலும் அந்தந்த ஊராட்சித் தலைவா்களே தேசியக் கொடியேற்றி உள்ளனா். 860 ஊராட்சிகளைக் கொண்ட மிகப்பெரிய மாவட்டம் திருவண்ணாமலை. அனைத்து வீடுகளுக்கும் 100 சதவீதம் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதே ஜல்ஜீவன் திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டத்தை விரைந்து முடிக்க மாவட்ட நிர்வாகம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அது மட்டுமின்றி அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-2 மற்றும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் மூலம் விவசாயத்திற்கு பயன்படுத்தாத நிலங்களை ஒருங்கிணைத்து விவசாயம் செய்திட பயிர்கடன், உரக்கடன் பெறலாம்.

மேலும் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் மூலம் மயானங்கள், சுற்றுச்சுவர் அமைக்கவும், பக்ககால்வாய் அமைக்கவும், பண்ணைக்குட்டைகள் அமைக்கவும் அரசாங்கம் அதிக அளவில் மானியங்களை கொடுத்து வருகிறது. நமது மாவட்டத்திற்கு எண்ணற்ற புதிய திட்டங்கள் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் சிறப்பான முறையில் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து விரைவாக திட்டப்பணிகளை முடித்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கிராம பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வடைய ஏற்கனவே பண்ணைக்குட்டைகள் அமைத்து மாநிலத்தில் முதலிடத்தில் உள்ளோம்.அதே போல் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் மேலும் பண்ணைக்குட்டைகளை அதிகளவில் அமைத்திட மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக முயற்சிகள்மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக அத்திவாசிய தேவைகளான வீட்டுமனைப் பட்டா, தனிநபர் வீடு, கழிவறை, குடிநீர் தேவை, மின்சார வசதிகள், சாலை வசதிகள் போன்ற அத்தியவாசிய தேவைகள் குறித்து அப்பகுதி மக்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனுக்கள் அளித்தனர். நிகழ்ச்சியில் மாநில தடகள சங்க துணைத்தலைவர் கம்பன், ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சரண்யாதேவி, திருவண்ணாமலை உதவி கலெக்டர் வெற்றிவேல், திருவண்ணாமலை ஒன்றியக்குழுத் தலைவர் கலைவாணி கலைமணி, துணைத்தலைவர் ரமணன், ஊராட்சி மன்ற தலைவர் பாக்கியம்மாள், தி.மு.க. நகர செயலாளர் கார்த்திவேல்மாறன், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) விஜயலட்சுமி, அரசு அலுவலர்கள் மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 16 Aug 2022 9:29 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  3. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  4. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  5. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  6. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  7. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!
  8. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...
  9. வீடியோ
    Pakistan-ல் Rahul ஆதரவாளர்கள் அட்டகாசம் | புலம்பும் மூத்த Congress...
  10. குமாரபாளையம்
    குடிநீர் ஆதாரம் குறித்து நீரேற்று நிலையத்தை பார்வையிட்ட கலெக்டர்