சாப்பிடும் போது தண்ணீர் குடிக்கலமா? விடையளிக்கும் புதிய ஆய்வு முடிவுகள்

Uses of Drinking Water -சாப்பிடும் போது தண்ணீர் குடிப்பது நல்லதா..? இல்லையா..? என்பது குறித்து பல முரண்பட்ட கருத்துகள் இருக்கின்றன

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
சாப்பிடும் போது தண்ணீர் குடிக்கலமா? விடையளிக்கும் புதிய ஆய்வு முடிவுகள்
X

பைல்படம்

Uses of Drinking Water - சாப்பிடும் போது தண்ணீர் குடிக்கலாமா வேண்டாமா என்பது குறித்த புதிய ஆய்வு முடிவுகள் வெளிவந்துள்ளன.

இது குறித்து சமீபத்திய ஆய்வின் முடிவுகளில் தெரிய வந்துள்ளது. நம்முடைய வீடுகளில் பெரும்பாலும், சாப்பிடும் போது அருகில் தண்ணீர் வைத்து கொள்ளும் பழக்கம் இருக்கும். காரணம் சாப்பிடும் போது காரம் எடுப்பது, விக்கல் எடுப்பது போன்ற சில தவிர்க்க முடியாத சிக்கல்களுக்கு அளவோடு தண்ணீர் குடிப்பது பரவாயில்லை.ஆனால், சாப்பிடும் போது தண்ணீர் குடிப்பது நல்ல பழக்கமல்ல என்று சமீபத்திய ஆய்வின் முடிவில் தெரிய வந்துள்ளது. சாப்பிடும்போது திரவ பொருட்களை எடுத்துக் கொள்வது மோசமான மெல்லும் பழக்கத்தையும் ஏற்படுத்தும்.

ஆம், ஒரு பொது விதியாக, திடப்பொருட்களுடன் எந்த திரவத்தையும் கலக்கக்கூடாது. திரவமானது நேரடியாக குடலுக்குள் சென்று, அனைத்து செரிமான நொதிகளையும் நீக்கி, செரிமானத்தைத் தடுக்கிறது.மாறாக சாப்பிடுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன் சாப்பிட்ட 30 நிமிடங்களுக்கு பின் ஒரு கிளாஸ் அல்லது சற்று கூடுதல் தண்ணீர் அருந்துவது நல்லது என்கின்றன ஆய்வுகள்.சாப்பிடும் போது தண்ணீர் ஏன் குடிக்க கூடாது?

எடை அதிகரிப்பு: பொதுவாக உடலில் உள்ள கொழுப்புகளை கரைக்கவும் எடையை குறைக்கவும் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது உண்மைதான். ஆனால், சாப்பிடும் போது தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் பாதிப்புகளில் ஒன்று உடல் எடை அதிகரிப்பு ஆகும்.

ஆம், உணவின் போது பருகும் தண்ணீர் அல்லது திரவத்தால் இன்சுலின் அளவு அதிகரித்து, உணவு உடைக்கப்பட்டு கொழுப்பு உருவாகி, பின் அது உடலில் சேமிக்கப்படுகிறது. அதோடு செரிமான ஆற்றல் குறையும்.செரிமான ஆற்றல் குறைவாக இருப்பதே உடல் பருமன் உண்டாக முக்கிய காரணமாக இருக்கும்.

இரைப்பை பிரச்னைகள்: உணவின்போது அதிக தண்ணீர் குடிப்பது அசிடிட்டியை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. அதிக தண்ணீர் அல்லது திரவம் உங்களை அதிக காற்றை விழுங்கச் செய்யும், இது உங்களை அதிகமாக எரிக்கச் செய்யும்.அது வயிறு மற்றும் வாய்ப்பகுதியில் அதிக அமிலச் சுரப்பை ஏற்படுத்தும். இதனால், செரிமான செயல்முறையை மெதுவாக்கும். இது உங்களுக்கு வாயுத்தொல்லை, அசிடிட்டி போன்ற சிக்கல்களை ஏற்படும்.

இன்சுலின் அளவு உயரும்:ரத்த சர்க்கரை அளவையும், உடலில் கொழுப்பு சேமிப்பையும் கட்டுப்படுத்தும் இன்சுலின் என்பது ஒரு ஹார்மோன் ஆகும்.உணவின் போது தண்ணீர் ஜூஸ், சோடா, குடிப்பது, இன்சுலின் அளவை அதிகரிக்கலாம். இது உடல் எடையை அதிகரிக்கும்.சில நேரம் இன்சுலின் அதிகமாக சுரப்பதும் கூட சில நேரத்தில் நீரிழிவுக்கு மிக முக்கியக் காரணங்களில் ஒன்றாக இருக்கிறது.

உமிழ்நீர் அளவில் மாற்றம்:நம்முடைய உடலின் ஜீரண ஆற்றலை முறைப்படுத்தவும் மேம்படுத்தவும் உமிழ்நீர் மிக முக்கியம். ஆனால், உணவின் போது ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பது உமிழ்நீர் உற்பத்தியைக் குறைப்பதோடு அதன் செயல்திறனையும் குறைக்கிறது.எனவே, இனியாவது சாப்பிடும் போது தண்ணீர் குடிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 2022-08-13T15:53:54+05:30

Related News