/* */

கிரிவலம் செல்லும்போது வன விலங்குகளுக்கு உணவு வழங்குவதை தவிர்க்கவும்

திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லும் மக்கள் வன விலங்குகளுக்கு உணவு பொருட்கள் வழங்குவதை தவிர்க்க வேண்டும் என வனத்துறையினர் வேண்டுகோள்

HIGHLIGHTS

கிரிவலம் செல்லும்போது வன விலங்குகளுக்கு உணவு  வழங்குவதை தவிர்க்கவும்
X

கிரிவலப்பாதையில் மான்களுக்கு உணவு அளித்த பக்தர்கள்

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள வனப்பகுதியில் மான்கள், குரங்குகள் உள்ளன. இந்த வனப்பகுதியில் இருந்து மான்கள், மக்கள் நடமாட்டம் உள்ள கிரிவலப்பாதைக்கு வருவதை தடுக்க வனத்துறை சார்பில் வனப்பகுதியின் எல்லையில் இரும்பு கம்பியால் வேலி அமைக்கப்பட்டு உள்ளது.

சில சமயங்களில் இரும்புவேலி வரை மான்கள் கூட்டமாக வருகை தருகின்றன. சமீப நாட்களாக கிரிவலத்திற்கு வரும் மக்கள் வன விலங்குகளான மான்கள், குரங்குகளுக்கு பிஸ்கெட், பன், காய்கறி உள்ளிட்ட உணவு பொருட்களை கொடுகின்றனர்.

கிரிவலப்பாதையில் பழனி ஆண்டவர் கோவில் உள்ள வனப்பகுதியில் காலை மற்றும் மதியத்தில் மான்கள் கூட்டமாக வந்து நிற்கின்றன. அதேபோல் நேற்றும் மான்கள் அந்த பகுதியில் வந்து நின்றது. அவை மக்கள் கொடுக்கும் உணவு பொருட்களை தின்றப்படி அங்கேயே நின்று கொண்டிருந்தன.

இதனால் அவ்வழியாக வந்தவர்கள் மான்களை கண்டு அவர்களது செல்போனில் புகைப்பட எடுத்தனர். அப்போது அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்ட வனத்துறை அலுவலர்கள் பொதுமக்களை கலைந்து செல்லும்படி கூறினர். அதைத் தொடர்ந்து வனத்துறையினர் வனப்பகுதிக்குள் சென்று மான்களை விரட்டினர்.

பின்னர் வனத்துறையினர் கூறுகையில், வன விலங்குகள் சுயமாக உணவை தேடும் பழக்கம் கொண்டவை. அவற்றிற்கு பொது மக்கள் உணவு பொருட்கள் வழங்கினால் அவை சுயமாக உணவை தேடாமல் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிக்கு வர கூடும்.

வனவிலங்குகளுக்கு இட்லி, சாதம் போன்றவற்றை வழங்குகின்றனர். இது வேதனைக்குரிய செயலாகும். எனவே கிரிவலம் செல்லும் பொதுமக்கள் குரங்கு, மான்கள் போன்ற வன விலங்குகளுக்கு உணவு பொருட்கள் வழங்குவதை தவிர்க்க வேண்டும் என்றனர்.

பௌர்ணமி மற்றும் விசேஷ நாட்கள் என்று இல்லாமல் தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து கொண்டே இருக்கின்றனர். கிரிவலப் பாதை, நடை பாதை முழுவதும் அடியார்கள் என்ற போர்வையில் நூற்றுக்கணக்கானோர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் நிரந்தரமாக அங்கேயே தங்கி விட்டனர். கிரிவலம் வருவோர் தினமும் மூன்று வேளையும் அன்னதானம் நடைபெறுவதால், இவர்களும் சுயமாக உழைக்கும் பழக்கத்தை மறந்து விட்டனர்.

மாற்றுத்திறனாளிகளை தவிர்த்து உடல் ஆரோக்கியத்துடன் திரிபவர்களை காவல்துறையினர் அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Updated On: 4 April 2022 1:40 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்
  2. திருவண்ணாமலை
    தபால் வாக்கு சீட்டுகளை பாதுகாப்பாக கையாள ஆட்சியர் அறிவுரை
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையிலிருந்து சென்னைக்கு பயண கட்டணம் வெறும் ரூ.50 மட்டுமே
  4. திருவண்ணாமலை
    கோடை வெப்பத்தை தணிக்க அருணாச்சலேஸ்வரர் கோயிலில் ஏற்பாடு
  5. செங்கம்
    சுட்டெரிக்கும் வெயில்: சாத்தனூர் அணையில் சுற்றுலா பயணிகள் வருகை
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  7. வந்தவாசி
    ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் கோவில் தேரோட்ட திருவிழா
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  10. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?