/* */

திருவண்ணாமலையிலிருந்து சென்னைக்கு பயண கட்டணம் வெறும் ரூ.50 மட்டுமே

திருவண்ணாமலையிலிருந்து சென்னைக்கு பயண கட்டணம் வெறும் ரூ. 50 மட்டுமே என்பதால், பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

HIGHLIGHTS

திருவண்ணாமலையிலிருந்து சென்னைக்கு பயண கட்டணம் வெறும்  ரூ.50  மட்டுமே
X

திருவண்ணாமலையிலிருந்து சென்னைக்கு பயண கட்டணம் மிக குறைவு (கோப்பு படம்)

சைவத்தின் தலைநகரான திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திராவில் இருந்த ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள்.அண்மைக்காலங்களாக ஆந்திராவில் இருந்து வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிக அளவில் அளவில் உயர்ந்துள்ளது.

கார்த்திகை தீபம் ,சித்ரா பௌர்ணமி உள்ளிட்ட சிறப்பு நாட்களில் 30 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருகை தருவர், மாத பௌர்ணமி அன்று சுமார் 5 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை வருகை தருகின்றனர். மற்ற நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தற்போது குவிய துவங்கியுள்ளனர்.

இவர்களின் வசதிக்காக பவுர்ணமி கிரிவலத்தையொட்டி ஒவ்வொரு மாதமும் திருவண்ணாமலைக்கு சிறப்பு ரெயில் ஏற்கனவே இயக்கப்படுவது வழக்கம். இது தவிர தினசரி கூடுதலாக ஒரு ரயிலை திருவண்ணாமலைக்கு தினமும் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. ஆனால் சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு நேரடி ரயில் சேவை இல்லை. பஸ்கள் மூலம்தான் பெருமளவில் பக்தர்கள் செல்லும் நிலை இருந்தது. இதையடுத்து வேலூர் வரை இயக்கப்படும் பாஸ்ட் மின்சார ரயில், திருவண்ணாமலை வரை நீட்டித்தால் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு உதவியாக இருக்கும் என்று ரயில்வே போர்டுக்கு கோரிக்கைகள் வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் சென்னை கடற்கரையில் இருந்து வேலூர் கண்ட்ரோல்மென்ட் வரை இயங்கி வந்த மின்சார ரயில் வரும் இரண்டாம் தேதி முதல் தினமும் திருவண்ணாமலை வரை இயக்கப்பட உள்ளது.

சென்னை கடற்கரைக்கு செல்ல ரயில் கட்டணம்

திருவண்ணாமலை ரயில்வே ஸ்டேஷனில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படிதிருவண்ணாமலையில் இருந்து போளூருக்கு பத்து ரூபாயும், ஆரணி சாலைக்கு 15 ரூபாயும், கண்ணமங்கலத்திற்கு 20 ரூபாயும், வேலூர் கண்ட்ரோல்மென்ட்க்கு 25 ரூபாயும், காட்பாடிக்கு 25 ரூபாயும், சோளிங்கருக்கு முப்பது ரூபாயும், அரக்கோணத்திற்கு 35 ரூபாயும், திருவலங்காட்டிற்கு 40 ரூபாயும், திருவள்ளூருக்கு 40 ரூபாயும், வில்லிவாக்கத்திற்கு 45 ரூபாயும், பெரம்பூர் , வண்ணார்பேட்டை , ராயபுரம் , சென்னை கடற்கரை வரையில் 50 ரூபாயும் என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

திருவண்ணாமலையிலிருந்து மே மூன்றாம் தேதி முதல் தினமும் அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு வேலூர் கண்ட்ரோல்மென்ட் காட்பாடி வழியாக சென்னை கடற்கரைக்கு 9.50 மணிக்கு சென்றடையும். அதேபோல் மாலை ஆறு மணிக்கு சென்னை கடற்கரை ஸ்டேஷனில் புறப்பட்டு ரயில் 12.05 மணிக்கு திருவண்ணாமலை வந்து அடையும்.

திருவண்ணாமலையிலிருந்து பேருந்துகளில் செல்லும் பயணிகள் போளூர் கட்டணம் 30 ரூபாயும், வேலூர் செல்ல அரசு பஸ்களில் இரண்டு விதமாக கட்டணங்களில் 58 முதல் 75 வரை வசூலிக்கப்பட்டு வருகிறது. திருவண்ணாமலையிலிருந்து சென்னை கிளாம்பாக்கம் வரையில் 150, அல்ட்ரா டீலக்ஸ் 180, ஏசி பஸ் 190 என வசூல் வைக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 30 April 2024 2:03 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு