/* */

திமுக எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை: அதிமுக எம்எல்ஏ குற்றச்சாட்டு

AIADMK MLA -தேர்தல் நேரத்தில் திமுக மக்களுக்கு அளித்த எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை என அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. பேசினார்.

HIGHLIGHTS

திமுக எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை: அதிமுக எம்எல்ஏ குற்றச்சாட்டு
X

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் திருவண்ணாமலை வேங்கிக்கால் தலைமை மின்வாரிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

AIADMK MLA -மின் கட்டண உயர்வை அறிவித்த தி.மு.க. அரசை கண்டித்தும், மின்கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தியும் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் திருவண்ணாமலை வேங்கிக்கால் தலைமை மின்வாரிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

செய்தி தொடர்பாளர் பேராசிரியர் ச.கல்யாணசுந்தரம் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய பிரிவு செயலாளரும், தெற்கு மாவட்ட செயலாளருமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசியதாவது:

எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக இருந்த போது தமிழக மக்களுக்காக பல்வேறு திட்டங்களை தீட்டினார். அதற்கு உடனடியாக அரசாணைகளை வெளியிட்டார். வெளியிடப்பட்ட அரசாணைக்கு தேவையாக நிதியை ஒதுக்கி, இந்த திட்டங்கள் பயனாளிகளுக்கு சென்றடைகிறதா என்று கண்காணிக்கின்ற நல்ல ஆட்சியை நடத்தினார்.

ஆனால் கடந்த 16 மாதங்களாக ஆட்சியில் உள்ள தி.மு.க. அரசு மக்களை பாதிக்கின்ற வகையில் ஏற்கனவே சொத்து வரி, குடிநீர் கட்டணத்தை உயர்த்தினார்கள். தற்போது மின்சார கட்டணத்தை உயர்த்தி இருக்கிறார்கள். விரைவில் பஸ் கட்டணத்தை உயர்த்த இருக்கின்றனர். டீசல், பெட்ரோல் விலையை குறைக்கவில்லை. தி.மு.க. தேர்தல் நேரத்தில் மக்களுக்கு அளித்த எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வில்லை. நீட் தேர்வையும், கல்விக்கடனையும் ரத்து செய்வோம் என்றனர். அதனையும் செய்யவில்லை.

ஜெயலலிதா ஆட்சி காலத்தில் கொண்டு வந்த பல்வேறு திட்டங்களுக்கு இன்று மூடு விழா நடத்தி வருகின்றனர். அம்மா உணவகங்கள் மூடப்பட்டு வருகிறது. தாலிக்கு தங்கம் திட்டத்தை இந்த அரசு நிறுத்தி உள்ளது. எந்தெந்த திட்டங்களை எல்லாம் இந்த அரசு நிறுத்தினார்களோ அந்த திட்டங்களை மீண்டும் மக்களின் நல்லாதரவோடு அதிமுக அரசு எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் கொண்டு வருவோம். தி.மு.க.விற்கு பதிலடி கொடுக்கும் வகையில் விரைவில் வருகிற எந்த தேர்தலாக இருந்தால் அந்த தேர்தலில் அதிமுக வெற்றியை தொண்டர்களின் ஒத்துழைப்போடு வென்றெடுக்கும். மக்களை பாதிக்கின்ற தற்போது ஆளுகின்ற திமுக அரசு உயர்த்திய மின் கட்டணத்தை குறைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் நாராயணன், மாவட்ட இணை செயலாளர் அமுதா, பொருளாளர் நைனாக்கண்ணு, இளைஞர் அணி செயலாளர் குணசேகரன், அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளர் சுனில்குமார், தொழிற்சங்க செயலாளர் பழனி, நகர செயலாளர் செல்வம், ஒன்றிய செயலாளர்கள் ஜெயசுதா, நகர மன்ற உறுப்பினர்கள் ,ஒன்றிய கழக செயலாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 17 Sep 2022 11:40 AM GMT

Related News

Latest News

  1. திண்டுக்கல்
    நாளை முதல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் இடி மின்னலுடன் கோடை மழை! வெப்பம் தணிந்ததால் மக்கள்...
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. செங்கம்
    உடல் உறுப்புகள் தானம் செய்தவரின் உடலுக்கு ஆட்சியர் நேரில் மரியாதை
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  7. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  9. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  10. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்