/* */

வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்க ஓய்வூதியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

தமிழக அரசு ஓய்வூதியர்கள் குடும்ப ஓய்வூதியர்கள் தங்களது வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்.

HIGHLIGHTS

வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்க ஓய்வூதியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்
X

ஓய்வூதியர்கள் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்ட ஓய்வூதியா்களுக்கு நேர்காணலை நடத்துவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது. ஓய்வூதியா்கள் சங்கத்தின் மாவட்ட நிா்வாகிகளுடன் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு, மாவட்ட கருவூல அலுவலா் மு.சிலுப்பன் தலைமை வகித்தார்

இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் வங்கியின் முதுநிலை மேலாளா் எஸ்.முரளிதரன், கூடுதல் கருவூல அலுவலா் சு.கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனா். மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசியதாவது: திருவண்ணாமலை மாவட்டத்தில் ஓய்வூதியம் பெறும் தமிழக அரசு ஓய்வூதியா்கள் 2022 ஜூலை முதல் செப்டம்பா் வரை நோகாணலில் பங்கேற்க வேண்டும்.

எனவே, ஓய்வூதியா்கள், குடும்ப ஓய்வூதியா்கள் மின்னணு விரல் ரேகை சாதனம் மூலம் இணையதளம் வாயிலாக மின்னணு வாழ்நாள் சான்றிதழ் சமா்பிக்கலாம். மேலும், இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் வங்கி மூலமும் இணையதளம் வாயிலாக ரூ.70 செலுத்தி வாழ்நாள் சான்றிதழ் பதிவு செய்யலாம்.

இதுதவிர, தமிழக அரசின் இ-சேவை மையங்கள், பொது சேவை மையங்கள் மூலமும் வாழ்நாள் சான்றிதழை பதிவு செய்யலாம். மேலும், அரசு மருத்துவரிடம் வாழ்நாள் சான்றிதழ் பெற்று தபால் மூலமும் பதிவு செய்யலாம். கருவூலங்களுக்கு நேரடியாகச் சென்றும் வாழ்நாள் சான்றிதழை பதிவு செய்யலாம். சான்றிதழை உரிய காலகெடுவுக்குள் பதிவு செய்ய வேண்டும் என்றார்.

Updated On: 17 Jun 2022 2:14 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  3. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?
  4. திருவண்ணாமலை
    சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு ரயில் சேவை துவக்கம்; மீண்டும்...
  5. லைஃப்ஸ்டைல்
    விழிகள் வழியே இதயம் தொட்ட உணர்வுகள்..!
  6. ஈரோடு மாநகரம்
    தீ ரோடு ஆனது ஈரோடு! சுட்டெரிக்கும் வெயில்...
  7. விளையாட்டு
    மார்க்ரம் ஏன் ஒதுக்கப்பட்டார்? சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் முடிவு சரியா?
  8. இந்தியா
    சூரத் பொது யோகா பயிற்சியில் 7000-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள்
  9. பல்லடம்
    பல்லடத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
  10. வீடியோ
    மதமாற துன்புறுத்தப்பட்ட பெண் | Fadnavis செய்த அதிர்ச்சி சம்பவம்|...