/* */

தீபத் திருவிழா முடிந்த நிலையில் திருவண்ணாமலையில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால் அமர்வு தரிசனம் மற்றும் சிறப்பு தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது

HIGHLIGHTS

தீபத் திருவிழா முடிந்த நிலையில் திருவண்ணாமலையில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
X

கோவிலுக்கு வெளியே வரிசையில் காத்திருக்கும் பக்தர்களின் கூட்டம்

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 17 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா தீபம் கடந்த 26 ஆம் தேதி 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் ஏற்றப்பட்டது.

தொடர்ந்து 8 வது நாளாக நேற்று மகா தீபம் காட்சியளித்தது. விட்டுவிட்டு பெய்யும் கனமழை, பலத்த காற்றிலும் சுடர்விட்டு பிரகாசித்த தீபத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

கனமழை, பலத்த காற்றிலும் சுடர்விட்டு பிரகாசித்த அருணாசலேஸ்வரர் மகாதீபம்


அண்ணாமலையார் கோயில் ஆன்மிக வழக்கப்படி, மலை மீது தொடர்ந்து 11 நாட்களுக்கு மகாதீபம் காட்சிதரும். அதன்படி, 8 வது நாளான நேற்று மாலை 6 மணிக்கு, மலை மீது மகாதீபம் ஏற்றப்பட்டது. வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தம் மற்றும் வடகிழக்கு பருவமழை தீவிரம் காரணமாக, திருவண்ணாமலையில் விட்டு விட்டு பரவலான மழை பெய்கிறது. அதோடு, மலை மீது பலத்த காற்றும் வீசுகிறது.

ஆனாலும், மழையிலும், காற்றிலும் அணையாமல் சுடர்விட்டு மகாதீபம் காட்சியளிக்கிறது. மேலும், மலை மீது மகாதீபம் ஏற்றும் திருப்பணி தடையின்றி நடந்து வருகிறது. தீபம் ஏற்றுவதற்காக, தினமும் நெய் மற்றும் திரி, கற்பூரம் மற்றும் பூஜை பொருட்கள் அண்ணாமலையார் கோயிலில் இருந்து மலை உச்சிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மலையில் தீபம் ஏற்றும் முறைதாரர்களான பர்வதகுலத்தினர் மற்றும் கோயில் திருப்பணி ஊழியர்கள், மழையையும், காற்றையும் பொருட்படுத்தாமல் மலைமீது முகாமிட்டு தினமும் தீபம் ஏற்றும் திருப்பணியை நிறைவேற்றி வருகின்றனர். மலை மீது வரும் 6 ம் தேதி வரை மகாதீபம் காட்சிதரும். மேலும், மலை மீது மகாதீபம் காட்சிதரும் நாட்களில் கிரிவலம் செல்வதும், கோயிலில் வழிபடுவதும் சிறப்புக்குரியது. எனவே, அண்ணாமலையார் கோயிலுக்கு பக்தர்களின் வருகை கடந்த சில நாட்களாக அதிகரித்திருந்தது.

சிறப்பு தரிசனங்கள் ரத்து

இந்நிலையில் சனி ஞாயிறு விடுமுறை தினமான நேற்று இன்றும் பக்தர்களின் கூட்டம் அண்ணாமலையார் கோயில் அலை மோதுகிறது.

சனிக்கிழமையான நேற்று அண்ணாமலையாரை தரிசிப்பதற்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். தரிசனத்திற்கு சுமார் 5 மணி நேரம் ஆனதாக பக்தர்கள் தெரிவித்தனர்.

திருவண்ணாமலையில் மழை பெய்த போதிலும் அதனைப் பொருட்படுத்தாமல் பக்தர்கள் தொடர்ந்து கிரிவலம் சென்று மகா தீபத்தை தரிசனம் செய்தனர். பவுர்ணமி தினத்தில் வருகை தரும் பக்தர்கள் கூட்டம் போல் நேற்றும், இன்றும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் சேஷத்திரி, ரமணர் ஆசிரமம், உள்ளிட்ட சன்னதிகளிலும் பக்தர்கள் தரிசனம் செய்தனர். சிலர் ஆட்டோக்களில் சென்று அஷ்ட லிங்கங்களை தரிசனம் செய்தனர்.

தீபத் திருவிழாவின் போது கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் இப்போதுதான் திருவிழா நடைபெறுவது போல பக்தர்கள் வருகை அதிகமாக உள்ளது. அருணாசலேஸ்வரர் சன்னதி அருகில் குறுக்கு வழியில் பக்தர்கள் அழைத்து செல்லப்பட்டதால் பலர் வாக்குவாதம் செய்தனர். இருந்த போதிலும் அந்த வழியாக தொடர்ந்து பக்தர்கள் அனுமதிக்கப்பட்டதால் வரிசையில் காத்திருந்த பக்தர்கள் அவதிப்பட்டனர்.

கூட்டம் அதிகமாக உள்ள காரணத்தினால் தற்போது விஐபி தரிசனம் அமர்வு தரிசனம் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு தரிசனங்கள் பக்தர்களின் கூட்டம் நாளையும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டால் திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமைகளிலும் அமர்வு தரிசனம் மற்றும் விஐபி தரிசனம் ரத்து செய்யப்படும் என திருக்கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 3 Dec 2023 3:04 AM GMT

Related News

Latest News

  1. பொன்னேரி
    பெருமாள் - சிவன் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு விழா
  2. லைஃப்ஸ்டைல்
    நிமிர்ந்து நில்..! மலைகூட மடுவாகும்..!
  3. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் 15வது திருமண நாள் வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிமையை தேட புத்த மொழிகள்!
  5. ஈரோடு
    மாணவர் மீது தாக்குதல்: ஈரோடு தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகம் மீது...
  6. ஆவடி
    அடுக்குமாடி குடியிருப்பில் தவறி விழுந்த குழந்தையை காப்பாற்றும் வீடியோ...
  7. வானிலை
    ஊட்டிக்கே இந்த நிலைமைனா? மத்த ஊரை யோசித்து பாருங்க!
  8. வணிகம்
    கடன் தொல்லையில்லாமல் வாழ இப்படி ஒரு வழி இருக்கா?
  9. வணிகம்
    பணத்தை இப்படி சேமித்தால்.... ஓஹோன்னு வாழலாம்...! எப்படி?
  10. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!