/* */

அண்ணாமலையார் கோயில் அருகில் கழிவுநீர்: பக்தர்கள் அவதி

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் அருகில் கழிவுநீர் வெளியேறி துர்நாற்றம் வீசுவதால் பக்தர்கள் அவதிப்பட்டனர்

HIGHLIGHTS

அண்ணாமலையார் கோயில் அருகில் கழிவுநீர்:  பக்தர்கள் அவதி
X

அம்மணி அம்மன் கோபுரம் அருகே சாலையில் ஓடும் கழிவு நீர்

திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயிலில் மார்கழி மாத சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. இதையொட்டி, உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி வெளி மாவட்ட பக்தர்கள் மற்றும் சபரி மலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்கு செல்லும் பக்தர்களின் வருகை அதிகளவில் உள்ளன. அவர்கள் அனைவரும் ராஜகோபுரம் மற்றும் அம்மணி அம்மன் கோபுர வாசல் வழியாக, கோயில் உள்ளே சென்று சுவாமி தரிசனம் செய்கின்றனர்.

இந்நிலையில் அம்மணி அம்மன் கோபுர வாசல் முன்பு வட ஒத்தவாடை வீதியில், இரண்டு இடங்களில் உள்ள பாதாள சாக்கடை குழாயில் இருந்து கழிவுநீர் நேற்று மாலை முதல் அதிகளவில் வெளியேறியது. இதனால், அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியது. மேலும், சாலை முழுவதும் கழிவுநீர் சூழ்ந்து கொண்டது. இதன் எதிரொலியாக, அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் அவதிப்பட்டனர். கழிவு நீரில் நடந்தும், துர்நாற்றத்தை தாக்கு பிடிக்க முடியாமல் மூக்கை மூடிக் கொண்டும் சென்றனர். பாதாள சாக்கடையில் உள்ள அடைப்புகளால் கழிவுநீர் வெளி யேறுகிறது.

திருவண்ணாமலை நகரில் பல இடங்களில் உள்ள பாதாள சாக்கடையில் இருந்து கழிவுநீர் வெளியேறுகிறது. அதில் ஒரு பகுதியாக, அண்ணாமலையார் கோயில் அம்மணி அம்மன் கோபுர வாசல் முன்பு உள்ள வட ஒத்தவாடை வீதியிலும் கழிவுநீர் வெளியேறி வருகிறது.

இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டு, நிரந்தர தீர்வு காண வலியுறுத்தியும் பலனில்லை. பாதாள சாக்கடையில் இருந்து கழிவுநீர், அடிக்கடி வெளியேறுவதால் துர்நாற்றம் வீசுகிறது. கோயிலுக்கு மனநிறைவுடன் செல்ல முடியாமல் பக்தர்கள் தவிக்கின்றனர். இதனால் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

கோயில் மாட வீதி, வட மற்றும் தென் ஒத்த வாடை வீதி களை தூய்மையாக வைத்திருக்க நகராட்சி நிர்வாகம், கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்

கோயில் மாட வீதி, வட மற்றும் தென் ஒத்த வாடை வீதி களை தூய்மையாக வைத்திருக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

Updated On: 26 Dec 2021 3:25 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    மர்ம நிழல்! விஞ்ஞானம் தோற்றது எப்படி? மெய்ஞானத்தால் அறிவியல் வளர்த்த...
  2. இந்தியா
    இந்தியாவின் சூப்பர்சானிக் டர்பீடோக்கள்..! கதறும் சீனா, அலறும்...
  3. சினிமா
    பாடல்களுக்கு ராயல்டி! பணத்தாசை பிடித்தவரா இளையராஜா?
  4. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் கைது : மக்கள் என்ன சொல்றாங்க தெரியுமா..?
  5. தமிழ்நாடு
    வறட்சியின் பாதிப்பு :உயிரிழக்கும் கால்நடைகள்..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாங்க டீ சாப்பிடலாம்..! அன்பின் உபசரிப்பு..!
  7. நாமக்கல்
    களங்காணி அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள்; 25 ஆண்டுக்கு பின்...
  8. மயிலாடுதுறை
    என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி..!
  9. நாமக்கல்
    ப.வேலூரில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு: முன்னாள் அமைச்சர்...
  10. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால்...சிறுமுயலும் சிங்கமாகும்..!