/* */

திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற பக்தர்கள்

திருவண்ணாமலையில் காவல்துறையினர் பக்தர்களை தடுக்காததால் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் கிரிவலம் வந்தனர்.

HIGHLIGHTS

திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற பக்தர்கள்
X

திருவண்ணாமலையில் கிரிவலம் வரும் பக்தர்கள்

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்திற்கு மாவட்ட நிர்வாகம் மூலம் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் கடந்த மாதம் நடைபெற்ற கார்த்திகை தீபத் திருவிழாவின் போது மகா தீபத்தன்று பொதுமக்கள் கிரிவலம் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

அதனை தொடர்ந்து இந்த மாதத்திற்கான பவுர்ணமிக்கு கிரிவலம் செல்ல அனுமதி அளிக்கப்படும் என்று பக்தர்கள் எதிர்ப்பார்த்து இருந்தனர். இந்த மாதத்திற்கான பவுர்ணமி நேற்று காலை 8.15 மணிக்கு தொடங்கி இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.22 மணிக்கு நிறைவடைகிறது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக பவுர்ணமி கிரிவலத்திற்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தடை விதிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து நேற்று கிரிவலப்பாதையில் உள்ள முக்கிய சாலை சந்திப்பு பகுதிகளில் போலீசார் பேரிகார்டுகள் மூலம் தடுப்புகள் அமைத்து பக்தர்கள் கிரிவலப்பாதையில் செல்லாமல் இருக்க கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் ஏராளமான பக்தர்கள் தனித்தனியாக தடையை மீறி மாற்றுப்பாதையில் கிரிவலப்பாதைக்கு வந்து தங்களது கிரிவலத்தை தொடர்ந்தனர்.

தடுப்புகள் அமைக்கப்பட்ட பகுதியில் கிரிவலப்பாதையில் உள்ள கிராமங்களை சேர்ந்தவர்கள் தங்களது அடையாள அட்டையை போலீசாரிடம் காண்பித்து சென்றனர். மேலும் அருணாசலேஸ்வரர் கோவில் மட்டுமின்றி கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்க கோவில்களிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

நேற்று மாலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வர தொடங்கினர். மேலும் நள்ளிரவில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்துக்கொண்டே இருந்தது.

காவல்துறையினர் பக்தர்களை தடுக்காததால் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் கிரிவலம் வந்தனர். இன்றும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வந்து கொண்டிருக்கின்றனர். கிரிவலப்பாதையில் வாகனங்கள் செல்லாத வகையில் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.

Updated On: 19 Dec 2021 5:18 AM GMT

Related News

Latest News

  1. மேலூர்
    மதுரை,சுபிக்சம் மருத்துவமனையில், மருத்துவ விழிப்புணர்வு முகாம்..!
  2. மேலூர்
    மதுரை கோயில்களில் பஞ்சமி வராகியம்மன் சிறப்பு பூஜை..!
  3. தேனி
    முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கினால் மட்டுமே....??
  4. லைஃப்ஸ்டைல்
    முதல்ல குழந்தை மனசை புரிஞ்சிக்குங்க..! குழந்தை வளர்ப்பு டிப்ஸ்..!
  5. வீடியோ
    சினிமாவ மொத்தமா அழிச்சிட்டானுங்க || பா.ரஞ்சித் மேல் சீரிய...
  6. சோழவந்தான்
    கொண்டையம்பட்டி தில்லை சிவ காளியம்மன் கோவில் வளையல் உற்சவ திருவிழா
  7. ஈரோடு
    ஈரோட்டில் புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த 3 கடைகளுக்கு...
  8. இராஜபாளையம்
    ராஜபாளையம் அருகே திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறந்து வைத்த
  9. ஈரோடு
    எடப்பாடி பழனிசாமி 70வது பிறந்தநாள்: பெருந்துறையில் சர்க்கரைப் பொங்கல்...
  10. தமிழ்நாடு
    அனைத்து மாவட்ட பதிவாளர்களுக்கு பத்திரப்பதிவு துறை தலைவர் சுற்றறிக்கை