/* */

தொடர் மழையால் சேதமடைந்த அரசு பள்ளி கட்டிடங்கள் கணக்கெடுப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில், தொடர் மழையால் சேதமடைந்த 600 அரசு பள்ளி கட்டிடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

HIGHLIGHTS

தொடர் மழையால் சேதமடைந்த  அரசு பள்ளி கட்டிடங்கள் கணக்கெடுப்பு
X

மாதிரி படம்

திருவண்ணாமலை மாவட்டத்தில், தொடர் மழையால் சேதமடைந்த 600 அரசு பள்ளி கட்டிடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் 140 கட்டிடங்களை இடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 460 பள்ளி கட்டிடங்களை விரைந்து சீரமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழையின் தீவிரம் மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கும் மேலாக மழை நீடித்தது. இடைவிடாது பெய்த மழையால், பயிர்கள் சேதம், சாலைகள் மற்றும் கட்டிடங்கள் பாதிக்கப்பட்டன. சேத மதிப்பீடுகள் தயாரிக்கும் பணி தற்போது மாவட்டம் முழுவதும் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலம் நடந்து வருகிறது.

இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி கட்டிடங்கள் தொடர் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை மற்றும் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் கடந்த ஒரு வாரமாக கூட்டு ஆய்வு நடத்தினர். அதன்படி, மாவட்டத்தில் உள்ள 545 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி கட்டிடங்கள், 375 அரசு நடுநிலைப் பள்ளிகள் மற்றும் 1,610 தொடக்கப்பள்ளிகளில் நேரடி ஆய்வு நடத்தப்பட்டது. அதில், 600 அரசு பள்ளி கட்டிடங்கள் சேதமடைந்திருப்பது தெரியவந்துள்ளது. அதில், பெரும்பாலான பள்ளிகள் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான தொடக்கப்பள்ளிகள் சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலான பழைய கட்டிடங்களில் இயங்கி வருகின்றன. கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டாலும், மாணவர்களின் எண்ணிக்கை காரணமாக பழைய கட்டிடங்களும் பல இடங்களில் பயன்படுத்தப்பட்டு வந்தன. இந்நிலையில், தொடர்ந்து ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக பள்ளிகள் நடைபெறாமல் பராமரிப்பின்றி இருந்தன. அதோடு, தொடர் மழையால் கட்டிடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, பள்ளி கட்டிடங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீரமைக்கும் பணி விரைவில் நடைபெற உள்ளன.

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் சேதமடைந்திருப்பதாக கண்டறியப்பட்டுள்ள 600 பள்ளி கட்டிடங்களில், 140 கட்டிடங்கள் அதிக அளவில் சேதமடைந்திருக்கிறது. எனவே, அந்த கட்டிடங்களை இடிக்க முடிவு செய்திருப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் 460 பள்ளி கட்டிடங்களை சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும், சேதமடைந்த வகுப்பறை கட்டிடங்களில் மாணவர்களை அமர வைக்க வேண்டாம் என பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் ச.அருள்செல்வம் உத்தரவிட்டுள்ளார். மேலும், தொடர் மழையால் பள்ளி சுற்றுப்புறங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரி செய்து, தூய்மையாக பராமரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Updated On: 8 Dec 2021 5:46 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  2. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  3. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  5. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  6. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  7. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  8. வீடியோ
    மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு !பாஜக நிர்வாகியால் முதல்வர்...
  9. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா