/* */

மின்வேலி அமைப்பது கிரிமினல் குற்றம்: மேற்பார்வை பொறியாளர் எச்சரிக்கை

விவசாய நிலத்தில் மின் வேலி அமைத்தால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என மின்பகிர்மான மேற்பார்வை பொறியாளர் எச்சரிக்கை

HIGHLIGHTS

மின்வேலி அமைப்பது கிரிமினல் குற்றம்:   மேற்பார்வை பொறியாளர்  எச்சரிக்கை
X

திருவண்ணாமலை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் பூ.காளிமுத்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- அறுந்து கிடக்கும் மின்கம்பிகள், சாய்ந்த மின் கம்பங்கள், உடைந்த மின்கம்பங்கள் பற்றிய விவரங்கள் மற்றும் சேதமடைந்து வெளியே தெரியும் புதை வட கம்பிகள், தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை பார்த்தால் அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு நேரிலோ, தொலைபேசி மூலமாகவோ தெரிவிக்க வேண்டும்.

திருவண்ணாமலை பகிர்மான வட்ட அலுவலகத்தில் செயல்பட்டு வரும் சேவை மையத்தினை 04175-255325 என்ற தொலைபேசி எண்ணிலும், 9445855768 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் தெரிவிக்கலாம்.

மழை காலங்களில் மின்மாற்றிகள், மின்கம்பங்கள், மின்பகிர்வுப் பெட்டிகள், ஸ்டே வயர்கள் ஆகியவற்றின் அருகே செல்ல வேண்டாம். விவசாயிகள் தங்கள் நிலத்தில் பயிர்களை பாதுகாக்க மின்வேலி அமைப்பதன் மூலம் அப்பாவி மக்கள் மின் விபத்துக்கு உள்ளாகின்றனர். விவசாய நிலத்தில் மின் வேலி அமைப்பது கிரிமினல் குற்றம். மீறும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் ஏற்படும் மின் தடை மற்றும் மின்சார பொருட்கள் சேதாரம் போன்ற புகார்களை தங்கள் பகுதிக்கு உட்பட்ட பிரிவு அலுவலர் மற்றும் உதவி செயற் பொறியாளர்களை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Updated On: 17 July 2021 8:23 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  2. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  3. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  4. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  5. வீடியோ
    மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு !பாஜக நிர்வாகியால் முதல்வர்...
  6. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  7. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  8. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே சுவையான மக்கானா கீர் செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    ஏசி அறையில் தூங்கலாமா? கூடாதா? - விவரமா தெரிஞ்சுக்குங்க!
  10. லைஃப்ஸ்டைல்
    ஆழியில் கண்டெடுத்த அற்புத முத்து..! எங்க வீட்டு இளவரசி..!