/* */

செய்யாறு சிப்காட் விவகாரம்: கைதானவர்களுக்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்

செய்யாறு சிப்காட் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 20 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

HIGHLIGHTS

செய்யாறு சிப்காட் விவகாரம்:  கைதானவர்களுக்கு ஜாமீன்   வழங்கியது நீதிமன்றம்
X

பைல் படம்

செய்யாறு சிப்காட் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 20 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே சிப்காட் தொழிற்பேட்டை 3ஆவது அலகு விரிவாக்கத்துக்காக, மேல்மா உட்பட 11 கிராமங்களில் 3,174 ஏக்கர் விவசாய நிலங்களை தமிழக அரசு கைப்பற்ற நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் இயக்கம் சார்பில் மேல்மா கூட்டுச்சாலையில், கடந்த ஜுலை மாதம் 2ஆம் தேதி முதல் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

அந்த வகையில், செய்யாறு சிப்காட் விரிவாக்கத்திற்காக 2,700 ஏக்கர் விளைநிலங்கள் சட்டத்திற்கு எதிரான முறையில் பறிக்கப்படுவதை எதிர்த்து, 128 நாட்களாகப் போராட்டம் நடத்தி வந்த விவசாயிகள் 147 பேர் மீது, செய்யாறு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அதைத்தொடர்ந்து, மேல்மா சிப்காட் எதிர்ப்பு இயக்க நிர்வாகி அருள் உள்ளிட்ட 20 பேரை காவல்துறையினர்கைது செய்தனர். இதில் ஏற்கனவே அதிக வழக்குகளில் தொடர்புடைய, அருள் மற்றும் 6 நபர்கள், திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் பேரில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவரால் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.

இதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன், சசிகலா , சீமான், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், வேல்முருகன், உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினர் அவர்களை விடுவிக்கக்கோரி தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தனர். அதில், வருங்காலங்களில் இது போன்று அரசு திட்டங்களை காரணமில்லாமல் எதிர்க்க மாட்டோம் என்றும், பிறர் தூண்டுதலின் பேரில் இத்தகைய செயல்களில் ஈடுபட மாட்டோம் என்றும் கூறி கோரிக்கை விடுத்தனர்.

அந்த வகையில், இவர்களின் கோரிக்கையை ஏற்ற தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், 6 பேர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்வதாக உத்தரவிட்டார். இதையடுத்து, இந்த 20 பேர் சார்பாக திருவண்ணாமலை நீதிமன்றத்தில் நேற்று (நவ.20) ஜாமீன் கேட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து, தற்போது இந்த 20 பேருக்கும் நிபந்தனை ஜாமின் வழங்கி நீதிபதி மதுசூதனன் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், அருள் என்பவர் கிருஷ்ணகிரி நீதிமன்றத்திலும், மற்ற 19 பேர் வேலூர் நீதிமன்றத்திலும் தினமும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் நீதிபதி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

இதில் அருள் என்பது ஒரு மீது போடப்பட்ட குண்டர் சட்டம் இதுவரை நீக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 21 Nov 2023 3:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நியாயமான எதிர்பார்ப்புகள் நிராகரிக்கப்படக் கூடாது..!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி பகுதியில் 1.1 கிலோ கஞ்சா பறிமுதல் ; ஒருவர் கைது
  3. வீடியோ
    🔴LIVE : என் அப்பா ஒரு கொத்தனார்!உருக்கமாய் பேசிய காளி வெங்கட்! |...
  4. லைஃப்ஸ்டைல்
    யாரையும் நம்பாதே கவிதைகள்..!
  5. வீடியோ
    முதல் நாளே இவ்ளோ வசூலா ? வாரி குவித்த Billa Re-Release !#ajith...
  6. கோவை மாநகர்
    யானை தந்தம் விற்க முயன்ற இருவர் கைது
  7. சோழவந்தான்
    மதுரை மாவட்ட கோயில்களில் குருப்பெயர்ச்சி மகா யாகம்..!
  8. ஆன்மீகம்
    மதுரை நகர் கோயில்களில் குருப்பெயர்ச்சி விழா
  9. லைஃப்ஸ்டைல்
    இளநீரை எப்ப குடிக்கணும் தெரியுமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி காதல் மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்