/* */

வெப்ப அலை; பகல் நேரத்தில் வெளியில் வர வேண்டாம் என கலெக்டர் வேண்டுகோள்

திருவண்ணாமலையில் வெப்ப அலை வீசும் நேரத்தில், பொதுமக்கள் வெளியில் வர வேண்டாம் என கலெக்டர் வேண்டுகோள் விடுத்தார்.

HIGHLIGHTS

வெப்ப அலை; பகல் நேரத்தில் வெளியில் வர வேண்டாம் என கலெக்டர் வேண்டுகோள்
X

கலெக்டர் பாஸ்கர பாண்டியன்.

வெப்ப அலை வீசும் மாவட்டங்களில் திருவண்ணாமலையில் ஒன்று என்பதால் மாவட்டத்தில் உள்ள மக்கள் பகல் நேரத்தில் வெளியில் வர வேண்டாம் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் வெப்பம் அதிகரித்து காணப்படும் நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் தனது அறிக்கையில்,

தமிழ்நாட்டின் வட மாவட்டங்களான வேலூர் , திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ,காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி ,சேலம், நாமக்கல், நீலகிரி, திருப்பூர் ,கோயம்புத்தூர், ஈரோடு, கரூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் வெப்ப அலை வீச கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்துமாறும் , அத்யாவசிய தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

குறிப்பாக நண்பகல் 12 மணி முதல் 4 மணி வரை வெளியில் செல்வதை தவிர்த்திடு மாறும் வெயிலின் தாக்கத்தால் உடல் நலக்குறைவு ஏற்படும் நிலையில் உடனடியாக மருத்துவரை அணுகுமாறும் பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்,

எனவே வெப்ப அலை வீசும் மாவட்டங்களில் திருவண்ணாமலையில் ஒன்று என்பதால் மாவட்ட மக்கள் பகல் நேரத்தில் வெளியில் வர வேண்டாம் என வேண்டுகோள் விடுத்து மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Updated On: 24 April 2024 2:28 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்