/* */

திருவண்ணாமலை: குரூப் 2 தேர்வு மையத்தில் கலெக்டர் முருகேஷ் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டத்தில் குரூப் 2 தேர்வை 29 ஆயிரத்து 447 பேர் எழுதினர். 4,141 பேர் தேர்வு எழுத வரவில்லை.

HIGHLIGHTS

திருவண்ணாமலை:  குரூப் 2 தேர்வு மையத்தில் கலெக்டர் முருகேஷ் ஆய்வு
X

மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு உதவியாளர் மூலம் நடைபெற்ற தேர்வினை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்

தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப்-2 மற்றும் குரூப்-2 ஏ பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு நடைபெற்றது. அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்திலும் குரூப்-2 மற்றும் குரூப்-2 ஏ பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு நடந்தது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, ஆரணி, கீழ்பென்னாத்தூர், போளூர் ஆகிய பகுதிகளில் 65 பள்ளிகள், 49 கல்லூரிகள் ஆக மொத்தம் 114 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்விற்கு திருவண்ணாமலை மாவட்டத்தில் 33 ஆயிரத்து 588 பேர் விண்ணப்பித்து இருந்தனர். தேர்வர்கள் தேர்வு மையங்களில் காலை 9 மணிக்குள் அனுமதிக்கப்பட்டனர். 9 மணிக்கு பின்னர் வந்தவர்கள் தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட வில்லை. தேர்வு மையங்களில் தேர்வின் போது முறைகேடு நடைபெறாமல் இருப்பதை கண்காணிக்க ஏதுவாக துணை ஆட்சியர் நிலையில் 14 பறக்கும் படைகளும், 228 ஆய்வு அலுவலர்களும், 27 மொபைல் யூனிட் அலுவலர்கள் மற்றும் 114 முதன்மை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர்.

மேலும் மாவட்டம் முழுவதும் தேர்வு பணிகள் அனைத்தும் 119 வீடியோகிராபர்கள் மூலம் பதிவு செய்யப்பட்டது. இந்த தேர்வை 29 ஆயிரத்து 447 பேர் எழுதினர். 4 ஆயிரத்து 141 பேர் தேர்வு எழுத வரவில்லை.

இம்மாவட்டத்தில் 36 மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு உதவியாளர் மூலம் கூடுதலாக ஒரு மணிநேரம் வழங்கப்பட்டு தேர்வு எழுதினர்.

திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி கலைக்கல்லூரி தேர்வு மையத்தில் நடைபெற்ற தேர்வை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Updated On: 22 May 2022 1:52 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  2. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதில் தாயை இழந்த தம்பிகள் பலருக்கு, அக்கா தான் அம்மா!
  4. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  5. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  6. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  7. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  8. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  9. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  10. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...