/* */

வாக்குச்சாவடி மையங்களுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை

வாக்குச்சாவடிகளுக்குள் செல்போன் கொண்டு செல்லக்கூடாது என வேட்பாளர்கள் மற்றும் முகவர்களை கலெக்டர் கேட்டுக்கொண்டார்.

HIGHLIGHTS

வாக்குச்சாவடி மையங்களுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை
X

 ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்

வாக்குச்சாவடிகளுக்குள் செல்போன் கொண்டு செல்லக்கூடாது என வேட்பாளர்கள் மற்றும் முகவர்களை கலெக்டர் கேட்டுக்கொண்டார்.

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று தேர்தல் நடத்தை விதிமுறைகளை பின்பற்றுதல் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

அதில், திருவண்ணாமலை மற்றும் ஆரணி மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அவர்களுடைய முகவர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது, வாக்குப்பதிவுக்கு முந்தைய 72 மணி நேரம் கடைபிடிக்க வேண்டிய தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் குறித்து கலெக்டர் விளக்கினார். மேலும் வரும் 17ஆம் தேதி மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைகிறது. எனவே, அதன் பிறகு வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் பிரச்சாரத்தில் ஈடுபடக்கூடாது என கலெக்டர் கேட்டுக்கொண்டார்.

மேலும், வாக்குப்பதிவு மையங்களுக்குள் தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குப்பதிவு அலுவலர்கள் தவிர்த்து, வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் யாரும் செல்போன் கொண்டு செல்ல அனுமதி இல்லை. எனவே, செல்போன் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களை வாக்குச்சாவடிகளுக்குள் கொண்டு செல்ல கூடாது என்றார்.

மேலும், வாக்குச்சாவடி மையத்திற்குள் அல்லது வாக்குச்சாவடி மையத்துக்கு அருகில் எவ்வித சட்ட விரோத நடவடிக்கைகளிலும், சட்டம் ஒழுங்கு பாதிக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. வாக்காளர்களை அவர்களுடைய இல்லங்களில் இருந்து வாகனங்களில் வாக்குச்சாவடிக்கு அழைத்து வரக்கூடாது என கலெக்டர் கேட்டுக்கொண்டார்.

கூட்டத்தில், செய்யார் உதவி கலெக்டர் பல்லவி வர்மா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) குமரன், தாசில்தார் சாப்ஜான், தேர்தல் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 16 April 2024 12:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மீண்டும் 75,000 புள்ளிகளை எட்டிய சென்செக்ஸ் 22,700க்கு மேல் நிஃப்டி
  2. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னவளுடனான பயணம் தொடர்கிறது..!
  3. லைஃப்ஸ்டைல்
    வானத்து சல்லடையில் மேகம் ஊற்றிய நீர், மழை..!
  4. அரசியல்
    5 ஆண்டுகள் தூங்கிய ஜெகன் அண்ணனை வறுத்தெடுத்த தங்கை..!
  5. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3வது நாளாக 82 கன அடியாக நீடிப்பு
  6. லைஃப்ஸ்டைல்
    ரமலான் காலத்தில் உடல் பலமும், மன வலிமையும்
  7. பட்டுக்கோட்டை
    வயலில் பாசி படர்ந்தால் நெல் எப்படி சுவாசிக்கும்? எப்படி சத்துக்களை...
  8. லைஃப்ஸ்டைல்
    கஷ்டங்கள் யாவும் கடந்து போகும்.. தோல்வியா? தூசிதான்!
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 173 கன அடியாக அதிகரிப்பு
  10. ஈரோடு
    ஈங்கூர் இந்துஸ்தான் கல்லூரியில் மாநில கைப்பந்து முகாம் நிறைவு விழா