/* */

அருணாசலேஸ்வரர் கோவில் தாமரை குளக்கரையில் பாலிகை விடும் நிகழ்ச்சி

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தாமரை குளக்கரையில் பாலிகை விடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

அருணாசலேஸ்வரர் கோவில் தாமரை குளக்கரையில் பாலிகை விடும் நிகழ்ச்சி
X

தாமரை குளக்கரையில் பாலிகை விடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக அருணாசலேஸ்வரர் மற்றும் உண்ணாமலையம்மனுக்கு திருக்கல்யாண வைபவம் கடந்த 18-ந்தேதி நடைபெற்றது

பின்னர் மண்டகபடி, நலங்கு உற்சவம், ஊஞ்சல் உற்சவம் ஆகியவை கோவிலில் நடைபெற்றது. திருக்கல்யாண உற்சவ நிறைவு நாளான நேற்று திருவண்ணாமலை தாமரை குளக்கரையில் பாலிகை விடுதல் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

முன்னதாக, அம்பாளுடன் அருணாசலேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மங்கள வாத்தியம் முழங்க கோவிலில் இருந்து தாமரை குளம் வரை ஊர்வலமாக வந்தார். அப்போது திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பின்னர், தாமரை குளத்தின் அருகில் உள்ள மண்டபத்தில் சாமி எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சியளித்தார். அங்கு சாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. நேற்று இரவு அருணாசலேஸ்வரர் மற்றும் உண்ணாமுலையம்மன் சிறப்பு அலங்காரத்தில் மாடவீதி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Updated On: 24 March 2022 1:15 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
  2. தேனி
    வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா இன்று தொடங்கியது..!
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. இந்தியா
    சென்னையில் தரையிறங்கிய 8 பெங்களூர் விமானங்கள்
  5. வீடியோ
    🔴LIVE : தனது சொந்த ஊரில் ஜனநாயக கடமையை ஆற்றிய பிரதமர் மோடி ||...
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. சேலம்
    மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு 1,500 கன அடியாக அதிகரிப்பு
  8. ஈரோடு
    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 44 அடியாக சரிவு
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்