/* */

மனித வாழ்க்கையில் பின்னிப்பிணைந்தது கலை: அமைச்சர் பேச்சு

மனித வாழ்க்கையில் பின்னி பிணைந்தது கலை, கலை இல்லையேல் தமிழ் இல்லை என அமைச்சர் வேலு பேசினார்.

HIGHLIGHTS

மனித வாழ்க்கையில் பின்னிப்பிணைந்தது கலை: அமைச்சர் பேச்சு
X

விழாவில் பேசிய அமைச்சர் வேலு.

திருவண்ணாமலை காந்தி நகர் பைபாஸ் சாலையில் அருணகிரிநாதர் அரங்கத்தில் அருணை தமிழ் சங்கத்தின் சார்பில் தமிழர் திருநாள் விழா நடைபெற்றது.

விழாவில் பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு, நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே .என். நேரு ஆகியோர் கலந்துகொண்டு சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கியும் திருவண்ணாமலையில் நடைபெற்ற கோல போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கியும் விழா பேருரை ஆற்றினார்கள்.

பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு பேசும்போது;

அருணை தமிழ் சங்கத்தை பொருத்தவரை காலையிலிருந்து இசைத்தமிழ், இயர் தமிழ், நாடகத் தமிழ் என மூன்று தமிழையும் வளர்ப்பதற்காக அதில் சிறந்தவர்களாக விளங்குபவர்களைக் கொண்டு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று உள்ளது.

உங்களுக்கு எனது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பொதுவாக இயற் தமிழை புலவர்கள் வளர்த்தார்கள், இசைத்தமிழை பாணர்கள் வளர்த்தார்கள், நாடகத் தமிழை கூத்தர்கள் தான் பேணி வளர்த்தனர்.

தமிழ் வளர்ச்சிக்கு கலை தான் உறுதுணையாக உள்ளது. தமிழ் வளர வேண்டும் என்றால் அதற்கு உறுதுணையாக கலைகள் இருக்க வேண்டும். கலைகள் மூலமாக தான் தமிழை வளர்க்க முடியும்.

கலையாற்றல் என்பது காவியமாக இருக்கலாம், ஓவியமாக இருக்கலாம், பாடல் ஆக இருக்கலாம், சிற்பமாக இருக்கலாம், கட்டடமாக இருக்கலாம், மனித வாழ்க்கையில் கலைகள் என்பது பின்னி பிணைக்கப்பட்டது. ஆயகலைகள் 64 என்று கூறுவோம்

கலை இல்லை என்று சொன்னால் தமிழ் இல்லை, தமிழ் இல்லை என்றால் கலை இல்லை, தமிழ் சங்கத்தில் கலையை பற்றி பேசாமல் பேச முடியுமா?

அருணகிரிநாதர் குறிப்பாக 1088 பாடல்களுக்கு சந்தம் அமைத்தவர். திரைப்படமாக இருந்தாலும், நாடகக் கலைகளிலும் அவர் சந்தத்தை பயன்படுத்தாதவர்களே கிடையாது என கூறி அருணகிரிநாதரின் சந்தப் பாடல்களை மேடையில் அமைச்சர் வேலு பாடி அசாத்தினார்.

இதனைத் தொடர்ந்து அருணை தமிழ்ச் சங்கம் சார்பில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அமைச்சர் நேரு, அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசினை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து அமைச்சர் நேரு பேசியதாவது:

பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு, பல்கலை வித்தகர். எந்த வேலையை கொடுத்தாலும் அதில் வெற்றி பெறுவார். அனைவரையும் காட்டிலும் சிறப்பானவராக இருக்க வேண்டும் என்று முயற்சி எடுத்து வெற்றி பெறக் கூடியவர் என்று பாராட்டினார்.

மேலும் இன்றைக்கு அமைச்சர் வேலு அவர்கள் தமிழகத்தில் உள்ள பல சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தேவைகளை முடிந்தவரை செய்து தருகிறார். அனைவரையும் சமாதானப்படுத்துவதில் வல்லவராக அமைச்சர் வேலு செயல்பட்டு வருகிறார்.

அரசியல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை செய்யும் பொழுதும் தோழமைக் கட்சிகளுடன் அன்பு பாராட்டுபவர்.

இந்த அருணை தமிழ்ச் சங்கம் மேலும் பல புகழை பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

நாட்டுப்புற கலைஞர்களை வரவழித்து நாடகங்களை நடத்துவது என்பது சிறந்தது, அதனை அமைச்சர் வேலு சிறப்பாக செய்துள்ளார். உங்களுடைய பணி மென்மேலும் தொடரவும் அருணை தமிழ்ச் சங்கம் மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என அமைச்சர் நேரு பேசினார்.

நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் பிச்சாண்டி, சட்டமன்ற உறுப்பினர்கள் கிரி, சரவணன், ஜோதி, வசந்தம் கார்த்திகேயன், அம்பேத்குமார் ,திருவண்ணாமலை நகர மன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன், திமுக நகர செயலாளர் கார்த்தி வேல்மாறன், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாவட்ட அமைப்பாளர் நேரு, ஒன்றிய குழு தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 19 Jan 2024 2:27 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீ எங்கே என் அன்பே, நீயின்றி நான் எங்கே? - மனைவியை காணவில்லை...
  2. லைஃப்ஸ்டைல்
    பூமி கணவன் வாடுவது கண்டு வான் மனைவி விடும் கண்ணீர், மழை..!
  3. நாமக்கல்
    ஓட்டு எண்ணிக்கை மையம் அமைந்துள்ள பகுதியில் டிரோன்கள் பறக்கத் தடை:...
  4. லைஃப்ஸ்டைல்
    மீந்து போன இட்லிகளை பயன்படுத்தி ருசியான மசாலா இட்லி செய்வது எப்படி?
  5. நாமக்கல்
    செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்
  6. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  7. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  8. ஈரோடு
    ஈரோடு தொகுதி ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமரா பழுது: ஆட்சியர் விளக்கம்
  9. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  10. நாமக்கல்
    டாஸ்மாக் ஊழியர்களை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களைப் பிடிக்க 6...