/* */

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் விவரங்கள் இணைப்பு

Voter Id Card Link With Aadhar Card- வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களின் ஆதார் எண் விவரங்கள் வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கப்பட உள்ளது.

HIGHLIGHTS

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் விவரங்கள் இணைப்பு
X

மாவட்ட ஆட்சியர் முருகேஷ்.

Voter Id Card Link With Aadhar Card- வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களின் ஆதார் எண் விவரங்கள் வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கப்பட உள்ளது என்று கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களின் ஆதார் எண் விவரங்களை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கப்பட உள்ளது. இதன்மூலம் வாக்காளர்களின் பெயர்கள் இரட்டைப்பதிவு, பல இடங்களில் பதிவு போன்றவற்றை தவிர்க்க முடியும் என்றும், வாக்காளர்களின் சொந்த விருப்பத்தின் அடிப்படையிலேயே ஆதார் எண் விவரங்களை பெறவேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வருகிற 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் 31-ந் தேதிக்கு முன்பாக வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள அனைத்து வாக்காளர்களின் ஆதார் எண்கள் பெறப்படும். இப்பணி வருகிற ஆகஸ்டு 1-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் தொடங்க உள்ளது. வாக்காளர்கள் அவர்களின் ஆதார் எண் விவரங்களை 6B என்ற படிவத்தை பயன்படுத்தி அளிக்க வேண்டும்.

இ-சேவை மையங்கள் மூலமாக அல்லது சம்பந்தப்பட்ட தாசில்தார், உதவி வாக்காளர் பதிவு அதிகாரி அல்லது வருவாய் கோட்ட அலுவலர், வாக்காளர் பதிவு அதிகாரிகளிடம் ஆதார் எண் விவரங்களை அளிக்கலாம். ஆதார் எண் இல்லையெனில் படிவம் 6Bல் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ள 11 வகையான ஆவணங்களில் ஏதேனும் ஒன்றின் விவரங்களை அளிக்கலாம்.

ஆதார் எண் விவரங்கள் வருகிற செப்டம்பர் மாதத்தில் வாக்குச்சாவடிகளில் நடத்தப்பட உள்ள வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் சிறப்பு முகாம்களிலும் படிவம் 6B அளிக்கலாம். மேலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு, வீடாக சென்றும் வாக்காளர்களின் ஆதார் எண் விவரங்களை பெறுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இந்திய தேர்தல் ஆணைய செயலிகள் மூலமாகவும் ஆதார் விவரங்களை வாக்காளர்கள் அளிக்கலாம். மேலும் ஆதார் எண் விவரங்களை அளிக்குமாறு எந்த ஒரு வாக்காளரையும் கட்டாயப்படுத்தப்படமாட்டாது. அனைத்து அரசு துறைகள் மூலமாக இப்பணி தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன.

எனவே சுய விருப்பத்தின் பேரில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களும் அவர்களின் ஆதார் எண் விவரங்களை அளிக்கும்படி கேட்டு கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 30 July 2022 9:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி காதல் மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  2. வீடியோ
    அயோத்தியில் ராஷ்டிரபதி Droupadi Murmu ! #president #droupadimurmu...
  3. லைஃப்ஸ்டைல்
    'யாரையும் நம்பாதே' - புகழ்பெற்ற பொன்மொழிகளின் ஆழமான பொருள்
  4. ஆன்மீகம்
    ரமலான் காலத்தின் ஆன்மிகச் சிந்தனைகள்: அர்த்தமுள்ள தமிழ் மேற்கோள்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    பூசணி, வெள்ளரி, முலாம்பழ விதைகளில் யார் பெஸ்ட்..?
  6. வீடியோ
    தலையை பாத்துட்டேன் அதுவே போதும்🥺..! #dhoni #msdhoni #csk #chepauk...
  7. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பணம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  8. வீடியோ
    வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் 2.5...
  9. வீடியோ
    Dhoni-யை Underestimate பண்ணக்கூடாது ! #msdhoni #dhoni #msd #dhonifans...
  10. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!