/* */

திருநேர் அண்ணாமலையார் கோயிலில் மூலவர் மீது சூரிய ஒளி படும் அபூர்வ நிகழ்வு

கிரிவலப் பாதையில் அமைந்துள்ள திருநேர் அண்ணாமலையார் கோவிலில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி படும் நிகழ்ச்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

திருநேர் அண்ணாமலையார் கோயிலில் மூலவர் மீது சூரிய ஒளி படும் அபூர்வ நிகழ்வு
X

மூலவர் மீது சூரிய ஒளி படும் அபூர்வ நிகழ்வு .

திருவண்ணாமலை திருநேர் அண்ணாமலையார் கோயிலில் தமிழ் புத்தாண்டு தினத்தில் மூலவர் மீது சூரிய ஒளி படும் அபூர்வ நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

கிரிவலப் பாதையில் திருநேர் அண்ணாமலையார் கோயில் உள்ளது. இங்கு ஒவ் வொரு ஆண்டும் தமிழ் புத்தாண்டு நாளில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே மூலவர் சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி படும் அபூர்வ நிகழ்வு நடைபெறும். அதன்படி, தமிழ் வருடப் பிறப்பான இன்று காலை சிவலிங்கம் மீது சூரிய ஒளி படும் நிகழ்வை கண்டு சுவாமியை தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

இந்த நிகழ்வு வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் என்பதால் இன்று ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர்

முன்னதாக திருநேர் அண்ணா மலையார் கோயிலில் இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும் சிறப்பு மலர் அலங்காரமும் செய்யப்பட்டது.

காலை 7 மணியளவில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நிகழும் மூலவர் மீது சூரிய ஒளி படும் அபூர்வ நிகழ்வு நடைபெற்றது. அப்போது, அண்ணாமலையாரையும் சூரிய பகவானையும் பக்தர்கள் அரோகரா கோஷமிட்டு வழிபட்ட னர். தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலையில், புகழ்பெற்ற அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில், சித்திரை மாத விழா இன்று சிறப்பாக நடைபெற்றது. இதை முன்னிட்டு அண்ணாமலையாருக்கு சிறப்பு அபிஷேகம், வில்வம் சாற்றி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

தொடர் விடுமுறை தினம் என்பதால் கோயிலில் பக்தர்களின் கூட்டம் மிக அதிகமாக இருந்தது. பக்தர்களின் தரிசனத்துக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

பக்தர்கள் அதிகாலை முதலே கோவிலுக்கு சென்று நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். நவக்கிரக சன்னதியில் நெய்தீபம் ஏற்றி வழிபட்டனர்.

நேற்று நள்ளிரவு முதலே பக்தர்கள் மலையைச் சுற்றி கிரிவலம் செல்ல தொடங்கினர். திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள ஸ்ரீ சேஷாத்திரி ஆசிரமம், ரமணாஸ்ரமம் ஆகிய இடங்களில் அதிகாலையில் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

முன்னதாக தமிழ்ப் புத்தாண்டு தினத்தையொட்டி சம்பந்த விநாயகர் சன்னதியில் புத்தாண்டு பஞ்சாங்கம் சாற்றப்பட்டது. புதிய பஞ்சாங்கம் காணிக்கை செலுத்திய பின், கோவில் சிவாச்சாரியார்கள் புதிய பஞ்சாங்கம் வாசித்தனர்.

Updated On: 15 April 2023 4:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  2. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  3. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  4. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  5. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  6. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  7. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  8. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  9. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...
  10. கல்வி
    +2 க்கு பிறகு அடுத்தது என்ன? சாதித்து காட்டுவோம்!