/* */

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 73.35 சதவீத வாக்குப்பதிவு

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 73.35 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

HIGHLIGHTS

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 73.35 சதவீத வாக்குப்பதிவு
X

மனைவியுடன் வந்து வாக்கு பதிவு செய்த மாவட்ட கலெக்டர்.

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 73.35 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது .

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் திமுக சார்பில் அண்ணாதுரை, அதிமுக கூட்டணி சார்பில் கலியபெருமாள், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன், நாம் தமிழர் கட்சி சார்பில் ரமேஷ்பாபு மற்றும் சுயேட்ச்சை வேட்பாளர்கள் என 31 பேர் திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் களத்தில் இருந்தனர்.

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 1722. வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.

166 வாக்குச்சாவடி மையங்கள் பதட்டமான வாக்குச்சாவடி மையங்கள் என கண்டறியப்பட்டது. ஒரு வாக்குச்சாவடி மையம் மிக பதட்டமான வாக்குச்சாவடி மையமாகும்.

பதட்டமான மற்றும் மிகப் பதட்டமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவம் மற்றும் வெப் கேமரா மூலம் நேரடி கண்காணிப்பு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் காலை முதல் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பிற்பகல் 12 மணிக்கு மேல் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருந்த காரணத்தினால் வாக்கு பதிவு சதவீதம் மந்தமாக இருந்தது.

இதனைத் தொடர்ந்து மாலை 5 மணி அளவில் வாக்குப்பதிவு சற்று வேகம் எடுத்தது. ஆறு மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது.

வாக்கு மையங்களில் வாக்கு பதிவு நிறைவடைந்த உடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசியல் கட்சி முகவர்களின் முன்னிலையில் சீல் வைத்து அனுப்பும் பணியினை அதிகாரிகள் மேற்கொண்டனர்

கடந்த 2019 ஆம் ஆண்டு திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் 78.14. சதவீதம் வாக்குகள் பதிவானது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இந்த ஆண்டு 73.35. சதவீதம் வாக்குகள் பதிவானது. கடந்த ஆண்டை விட கிட்டத்தட்ட 4.79. சதவீத வாக்குகள் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொகுதிகள் வாரியாக பதிவான வாக்கு பதிவு விவரம்

திருவண்ணாமலை: 70.9 சதவீதம்

ஜோலார்பேட்டை: 76.15

திருப்பத்தூர்: 73.3

செங்கம்: 75.11

கலசப்பாக்கம்: 74.11

கீழ்பெண்ணாத்தூர்: 74.28

சதவீத வாக்குகள் திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில் பதிவாகியுள்ளது

Updated On: 20 April 2024 1:12 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  2. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதில் தாயை இழந்த தம்பிகள் பலருக்கு, அக்கா தான் அம்மா!
  4. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  5. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  6. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  7. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  8. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  9. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  10. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...