/* */

திருவண்ணாமலைக்கு ரயில் மூலம் 2,660 மெட்ரிக் டன் யூரியா வருகை

திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகளின் தேவைக்காக 2,660 மெட்ரிக் டன் யூரியா ரயில் மூலம் வந்தடைந்தது.

HIGHLIGHTS

திருவண்ணாமலைக்கு ரயில் மூலம் 2,660 மெட்ரிக் டன் யூரியா வருகை
X

திருவண்ணாமலைக்கு ரயில் மூலம் வந்தடைந்த யூரியா மூட்டைகள்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் பயிரிட்டுள்ள வேளாண் பயிர்களுக்குத் தேவையான உரம் மற்றும் யூரியா தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க வேளாண்மை துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதன்படி காரைக்கால் துறைமுகத்திலிருந்து நடப்பு பருவத்துக்கு தேவையான 2660 மெட்ரிக் டன் யூரியா சரக்கு ரயில் மூலம் திருவண்ணாமலைக்கு வந்தடைந்தது.

பின்னர் அந்த யூரியா முட்டைகள் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் விற்பனை மையங்களுக்கு வேளாண் இணை இயக்குனர் மேற்பார்வையில் சரக்கு லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

இதைத் தவிர தனியார் உர விற்பனை நிலையங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்கத்தில் 3,037 மெட்ரிக் டன் யூரியா, 880 மெட்ரிக் தொன் டி ஏ பி, 802 மெட்ரிக் டன் பொட்டாஷ், 4,470 தமிழ் காம்ப்ளக்ஸ் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் ஆதார் எண்ணுடன் சென்று மன வள அட்டை பரிந்துரையின்படி பயிருக்குத் தேவையான உரங்களை பிஓஎஸ் இயந்திரம் மூலம் ரசீது பெற்று பயன்பெறலாம் என்று வேளாண்மைத் துறை இயக்குனர் அறிவித்துள்ளார்.

Updated On: 4 March 2022 2:04 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் வரும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல...பனி போல் விலகும்
  2. லைஃப்ஸ்டைல்
    ‘நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்கது’
  3. லைஃப்ஸ்டைல்
    உணர்ச்சிகளை உரக்கச் சொல்லும் உன்னத மேற்கோள்கள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆணவம்: வாழ்வை சிதைக்கும் நஞ்சு
  5. லைஃப்ஸ்டைல்
    பன்முகத்திறனில் தனித்த அடையாளம், சட்டமேதை அம்பேத்கர்..!
  6. வீடியோ
    🔴LIVE: கர்நாடகாவில் அண்ணாமலை அனல் பறக்கும் பேச்சு! | தொண்டர்கள்...
  7. லைஃப்ஸ்டைல்
    நீதியின் பக்கம் நில்லுங்கள்..! நீதி கிடைக்கும்..!
  8. வீடியோ
    ஆன்மிகம் கை கொடுக்கும்!படத்தை பார்த்தா என்ன கிடைக்கும்?...
  9. ஈரோடு
    ஈரோட்டில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை, பிரார்த்தனை
  10. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை தொடர் உயர்வு