/* */

சேத்துப்பட்டு பகுதியில் டெங்கு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

சேத்துப்பட்டு அடுத்த இயேசு ஊரில் டெங்கு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

HIGHLIGHTS

சேத்துப்பட்டு பகுதியில் டெங்கு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
X

தேசூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தடுப்பு குறித்த விழிப்புணர்வை 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு ஏற்படுத்தப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு வட்டம் தேசூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தடுப்பு குறித்த விழிப்புணர்வை 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு ஏற்படுத்தப்பட்டது.

டெங்கு கொசு உற்பத்தியாகும் இடங்கள் , வீட்டைச்சுற்றி குப்பை கூளங்கள் போடுவதை அப்புறப்படுத்துவது, தேவையற்ற டயர்கள், தேங்காய் சிரட்டைகள், முட்டை ஓடு, தண்ணீர் தொட்டி ஆகியவற்றில் கொசுப்புழு வளர்ச்சியை தடுப்பதற்கு முழு முயற்சி எடுக்க வேண்டும். மேலும் காய்ச்சல் கண்டவுடன் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகி முறையாக சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் நிலவேம்பு குடிநீர் பருகுவதன் மூலம் டெங்கு காய்ச்சலை தடுக்கலாம் என்று வலியுறுத்தப்பட்டது. பின்னர் சுகாதார உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. நிகழ்ச்சியில் மருத்துவ அலுவலர் ஷா, சுகாதார ஆய்வாளர் கணேஷ்குமார் மருத்துவ பணியாளர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 18 May 2022 2:09 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  3. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  4. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  5. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  6. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  7. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  8. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  9. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!