/* */

நகைக்கடன் தள்ளுபடியில் முறைகேடு நடந்ததாக கூறி பொதுமக்கள் மறியல்

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நகைக்கடன் தள்ளுபடியில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

நகைக்கடன் தள்ளுபடியில் முறைகேடு நடந்ததாக கூறி பொதுமக்கள் மறியல்
X

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நகைக்கடன் தள்ளுபடியில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரை அடுத்த சோமாசிபாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் திருவண்ணாமலை செல்லும் சாலையில் உள்ளது. சங்க செயலாளராக குணசேகரன், தலைவராக ரகோத்தமன் மற்றும் துணைத்தலைவர், இயக்குனர்கள் உள்ளனர்.

தமிழக அரசு கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் 31-ந்தேதி வரை 5 பவுன் (40 கிராம்) வரையிலான தங்க நகைக்கடன் பெற்றவர்களுக்கு தள்ளுபடி செய்தது. இங்கு பொது நகை கடனாக மேற்கண்ட தேதி வரை மொத்தம் 2,389 பேர் பெற்றுள்ளனர்.

இதில் தகுதியுள்ள பயனாளிகள் என 333 பேருக்கு தள்ளுபடி செய்திருப்பதாக கூட்டுறவு கடன் சங்கத்தில் அறிவிப்பு பலகையில் விவரங்கள் அடங்கிய பட்டியல் ஒட்டப்பட்டிருந்தது.

நிலமற்ற உறுப்பினர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி பட்டியலில் பயிர்கடன் தள்ளுபடி வந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் 5 பவுனுக்கும் குறைவாக நகைக்கடன் பெற்றவர்களுக்கு கடன் தள்ளுபடி வராததாலும் 200-க்கும் மேற்பட்டவர்கள் அந்த பகுதியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதபற்றி தகவல் அறிந்ததும் திருவண்ணாமலை கிராமிய துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை, திருவண்ணாமலை கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் அலுவலக கண்காணிப்பாளர் சுரேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். கீழ்பென்னாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி மற்றும் போலீசார் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.

இந்த சாலை மறியலால் திருவண்ணாமலை-சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Updated On: 24 March 2022 6:16 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  2. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  3. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  4. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  5. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  6. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்
  7. பட்டுக்கோட்டை
    இரண்டுக்குள்ளே விஷயம் இருக்கு தெரிஞ்சுக்கங்க..! அசத்தும் விவசாயி..!
  8. வேலைவாய்ப்பு
    குரூப் 4- வி.ஏ.ஓ தேர்வு முழு சிலபஸ் டவுன்லோட் செய்வது எப்படி?
  9. வேலைவாய்ப்பு
    ரயில்வே பாதுகாப்பு எஸ்.ஐ., ஆக விருப்பமா?
  10. லைஃப்ஸ்டைல்
    போலி பெஸ்டி கூட ஏற்படுவது சண்டையா..கோபமா..?