/* */

கலைஞர் வருமுன் காப்போம் திட்ட விழா, மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் தொடக்கம்

கீழ்பெண்ணாத்தூர் தொகுதியில் கலைஞர் வருமுன் காப்போம் திட்ட தொடக்க விழா மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது

HIGHLIGHTS

கலைஞர் வருமுன் காப்போம் திட்ட  விழா, மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் தொடக்கம்
X

கலைஞர் வருமுன் காப்போம் திட்டத்தின் மருத்துவ முகாமினை துவக்கி வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை  சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி வழங்கினார்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் இன்று கீழ்பென்னாத்தூர் தொகுதி துரிஞ்சாபுரம் ஒன்றியம் சீலப்பந்தல் கிராமத்தில் நடைபெற்ற கலைஞர் வருமுன் காப்போம் திட்டத்தின் மருத்துவ முகாமினை துவக்கி வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை தமிழக சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி வழங்கினார்.

மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்: திருவண்ணாமலை மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ், மாற்றுத்திறனாளிகள் மாணவர்களுக்கான மருத்துவ முகாம் கீழ் பென்னாத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. வட்டார வளமைய மேற் பார்வையாளர் செல்வம் தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர்கள் மோகன், ராமமூர்த்தி முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன் மருத்துவ முகாமினை தொடங்கி வைத்தார்.

மாவட்ட உள்ளடங்கிய கல்வி ஒருங்கிணைப்பாளர் கலைச்செல்வி கலந்துகொண்டு, 85 மாற்று திறனாளி மாணவர்களுக்கு அடையாள அட்டை, பஸ் பயண சலுகை அட்டைகளை வழங்கினார். முகாமில் 114 மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டு பல்வேறு மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர்.

இதில், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ.சு.தி.சரவணன் , மாவட்ட கவுன்சிலர் ஆறுமுகம், துரிஞ்சாபுரம் ஒன்றிய தலைவர் அண்ணாமலை, வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பு பயிற்றுநர்கள் மஞ்சு, அம்பிகா, மணி, சரண்யா, கிருஷ்ணபிரியா மற்றும் மருத்துவ குழுவினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Updated On: 24 April 2022 11:13 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆணவம்: வாழ்வை சிதைக்கும் நஞ்சு
  2. லைஃப்ஸ்டைல்
    பன்முகத்திறனில் தனித்த அடையாளம், சட்டமேதை அம்பேத்கர்..!
  3. லைஃப்ஸ்டைல்
    நீதியின் பக்கம் நில்லுங்கள்..! நீதி கிடைக்கும்..!
  4. ஈரோடு
    ஈரோட்டில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை, பிரார்த்தனை
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை தொடர் உயர்வு
  6. வீடியோ
    🔴LIVE : வைரமுத்து இளையராஜா விவகாரம்! பொங்கி எழுந்த பாடலாசிரியர்...
  7. ஈரோடு
    சென்னிமலை எம்.பி.என்.எம்.ஜெ. பொறியியல் கல்லூரியில் தேசிய தொழில்நுட்பக்...
  8. வீடியோ
    கோவிலுக்கு செல்வதால் யாருக்கு லாபம்! #mysskin|#hinduTemple|#hindu |...
  9. லைஃப்ஸ்டைல்
    தோல்வி கண்டு துவளாதீர்..! வீழ்ச்சி எழுச்சிக்கான முயற்சி..!
  10. லைஃப்ஸ்டைல்
    உனை பிரியாத வரவேண்டும் என்னுயிரே..!