ஜவ்வாதுமலையில் புதிய பயணிகள் நிழற்கூடம்: எம்எல்ஏ ஆய்வு

ஜவ்வாது மலையில் கட்டப்பட்டு வரும் புதிய பயணிகள் நிழற்கூடத்தை எம்எல்ஏ சரவணன் இன்று ஆய்வு மேற்கொண்டார்

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
ஜவ்வாதுமலையில் புதிய பயணிகள் நிழற்கூடம்: எம்எல்ஏ ஆய்வு
X

புதிய பயணிகள் நிழற்கூடத்தை ஆய்வு செய்த சரவணன், எம்எல்ஏ

கலசப்பாக்கம் தொகுதிகுட்பட்ட ஜவ்வாதுமலை பேருந்து நிலையத்தில் ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய பயணிகள் நிழற்கூடத்தை சரவணன் எம்எல்ஏ கூறுகையில், ஜவ்வாதுமலையில் எம்பி நிதியின் கீழ் ரூ. 15 லட்சமும் எம்எல்ஏ நிதியின் கீழ் ரூ. 15 லட்சமும் என 30லட்சம் மதிப்பீட்டில் புதிய பயணிகள் நிழற்கூடம் கட்டி முடிக்கப்படும் நிலையில் உள்ளது. அடுத்த மாதம் திறப்பு விழா நடைபெறும் என கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கோவிலூர் கானமலை நம்மியம்பட்டு ஆகிய கிராமங்களில் ரூ. 2 கோடியே 92 லட்சம் மதிப்பீட்டில் நெற்களம் அமைத்தால் ரேஷன் கடை கட்டுதல் பக்க கால்வாய் அமைத்தல் சிமெண்ட் சாலை ஆகிய பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் 2 கோடியே 22 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கோவிலூர் நம்மியம்பட்டு கானமலை ஆகிய பகுதிகளில் பாழைந்தும் மழை பெய்தால் ஒழுகும் நிலையிலும் இருந்து வரும் பள்ளி கட்டிடங்களை சரிசெய்வதற்காக ரூ. 31 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட உள்ளது.

ஜவ்வாதுமலையை பொறுத்தவரை அனைத்து சாலைகளையும் புதிதாக போடுவதற்கு மாவட்டத்தின் அமைச்சர் எ.வ.வேலு, பரிந்துரை செய்துள்ளார். இதனால் ஜவ்வாது மலை ஒன்றியம் முன்னேற்ற பாதையில் செல்கிறது என்று கூறினார்

நிகழ்ச்சியில் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 20 Aug 2022 12:45 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    மேக்கிங் வீடியோ வெளியிட்ட லியோ படக்குழு
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்த பயிலரங்கம்
  3. தமிழ்நாடு
    ராமேஸ்வரம் கோவிலில் உள்ள ஓலைச்சுவடிகளை காட்சிப்படுத்த கோரிக்கை
  4. தமிழ்நாடு
    அவசரமாக அமித்ஷாவை சந்தித்த அண்ணாமலை: தமிழக அரசியலில் புது குழப்பம்?
  5. உடுமலைப்பேட்டை
    அணைகள் கட்ட நிதி ஒதுக்காத தமிழக அரசு; பட்ஜெட் அறிவிப்பில் விவசாயிகள்...
  6. லைஃப்ஸ்டைல்
    வீட்டை அலங்கரிக்கும் பொம்மைகள்: பராமரிப்பது எப்படி என்பது தெரியுமா?
  7. தாராபுரம்
    தாராபுரம்; திருமண நாளில், மணப்பெண் ‘எஸ்கேப்’
  8. திருப்பூர்
    திருப்பூர்; ரேஷன் கடைகளில், 5 கிலோ கேஸ் சிலிண்டர் வினியோகம்
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாவட்ட ஏரி, குளங்களில் சவுடு மணல் அள்ளுவதற்கு அனுமதி
  10. காஞ்சிபுரம்
    வெடி விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு முதல்வரின் நிவாரண நிதி