அறுவடை செய்த கரும்புகள் வயலிலேயே காயும் நிலை: விவசாயிகள் வேதனை

கலசபாக்கம் அருகே ஆலை நிர்வாகம் லாரியை அனுப்பாததால் அறுவடை செய்த கரும்புகள் 4 நாட்களாக வயலிலேயே காயும் நிலை ஏற்பட்டுள்ளது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
அறுவடை செய்த கரும்புகள் வயலிலேயே காயும் நிலை: விவசாயிகள் வேதனை
X

அறுவடை செய்த கரும்புகள் 4 நாட்களாக வயலிலேயே காயும் நிலை.

கலசப்பாக்கம் அடுத்த சி.நம்மியந்தல் கிராம பகுதி விவசாயிகளில் பலர் கரும்பு பயிரிட்டு திருப்பத்தூர் அரசு சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்திருந்தனர். இந்த நிலையில் நன்கு விளைச்சலடைந்த கரும்புகளை சர்க்கரை ஆலை நிர்வாகத்தின் அனுமதியின்பேரில் அறுவடை செய்யப்பட்டது. ஆனால் 4 நாட்களாகியும் லாரி வராததால் அறுவடை செய்த கரும்புகள் வயலிலேயே காய்ந்து வருகின்றன.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ஒரு ஏக்கர் கரும்பு நடவு செய்வதற்கு ரூ.25 ஆயிரம் செலவாகிறது. இதன்பின்னர் 12 மாதங்கள் கண் விழித்து காப்பாற்றி வெட்டும்போது ஒரு டன் கூலியாக ரூ.900மும், தோட்டத்தில் இருந்து லாரியில் ஏற்றுவதற்கு கூலியாக ரூ.400ம் செலவாகிறது. இவ்வளவு செலவு செய்தும் ஏக்கருக்கு 60 டன் வர வேண்டிய நிலையில் 30 டன் மட்டுமே கரும்பு மகசூல் கிடைக்கிறது. அதிலாவது ஏதாவது கிடைக்கும் என நாங்கள் பயிரிட்ட கரும்பை ஆலைக்கு அனுப்பி வைக்கலாம் என்று இருந்தால் அறுவடை செய்தபின் ஆலை நிர்வாகம் லாரியை அனுப்பவில்லை.

ஆலையில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும் சரி செய்தபின்னரே கரும்புகளை எடுத்து செல்ல முடியும் என கூறுகின்றனர். வெட்டிய கூலி கூட கிடைக்காது இதனால் அறுவடை செய்த கரும்புகள் அனைத்தும் தக்கைபோல் காய்கிறது. இதனை ஏற்றி அனுப்பினால் வெட்டிய கூலி கூட நிற்காது.

மேலும் ஆலை ரிப்பேர் என்றால் கரும்பு வெட்டுவதை களப்பணியாளர் நிறுத்த சொல்ல வேண்டும். எனவே ஆலை நிர்வாகம் விவசாயிகளுக்கு எடைக்குறைவால் ஏற்பட்ட இழப்புக்கு நிவாரணம் தர வேண்டும்.

தமிழக அரசின் சார்பில் விவசாயத்திற்காக பல்வேறு மாற்றங்களை கொண்டுவந்தாலும் எங்களுக்கு எதுவும் கிடைக்காமல் கண்ணீர் மட்டுமே மிச்சமாகிறது. இந்த பிரச்சனையை நாங்கள் எங்கேபோய் சொல்வது? ஒரு விவசாயியின் கரும்பு 4 நாட்களாக தோட்டத்திலும், ரோடு ஓரத்திலும் கேட்பாரற்று கிடந்தால் இதற்கு காவல் காப்பது யார்? இங்கு எனது கரும்பு மட்டுமல்லாமல் சுற்றிலும் உள்ள பல ஏக்கர் விவசாயிகளின் கரும்பின் நிலையும் இதே நிலைதான் உள்ளது.

இதனால் கரும்பு பயிர் செய்வதை விட்டுவிடலாம் என்ற மனவேதனையுடன் கூறினார்.

Updated On: 2023-01-16T15:15:35+05:30

Related News

Latest News

 1. விளையாட்டு
  பிசிசிஐ ஒப்பந்தம் : வெளியேற்றப்பட்ட வீரர்களின் பட்டியல்
 2. இந்தியா
  மோசடி கணக்கு என அறிவிக்கும் முன் கடன் வாங்கியவர்களை கேட்க உச்ச...
 3. விளையாட்டு
  ஆன்லைனில் ரம்மி விளையாடுகிறீர்களா? நீங்களும் ஏமாற்றப்படலாம்...!
 4. அரசியல்
  கருப்பு ஆர்ப்பாட்டத்தில் திரிணாமுலின் ஆச்சரிய நுழைவு: காங்கிரஸ்...
 5. திருவள்ளூர்
  ராகுல் காந்தி எம்.பி .தகுதி நீக்கம் கண்டித்து காங்கிரசார் போராட்டம்
 6. கும்மிடிப்பூண்டி
  ஐ.நா. சபையில் ஒலித்தது கும்மிடிப்பூண்டி சமூக ஆர்வலரின் குரல்
 7. கும்மிடிப்பூண்டி
  கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தை தரம் உயர்த்த அலுவலர்கள் குழு ஆய்வு
 8. சினிமா
  பல மில்லியன் வியூஸ்கள் பெறுவது எப்படி? இதோ ரீல்ஸ் ஐடியாக்கள்!
 9. பூந்தமல்லி
  இன்ஸ்டாநியூஸ் செய்தி எதிரொலி: பழுதடைந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையம்...
 10. இந்தியா
  ஏப்ரல் மாதத்தில் 15 நாட்களுக்கு வங்கி விடுமுறை: முழு விபரம்