/* */

சிப்காட் விரிவாக்கத்திற்காக நிலங்களை கையகப்படுத்துவதை கண்டித்து பாமக ஆர்ப்பாட்டம்

செய்யாறு பகுதியில் சிப்காட் விரிவாக்கத்திற்காக நிலங்களை கையகப்படுத்துவதை கண்டித்து பாமக தலைவர் அன்புமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

சிப்காட் விரிவாக்கத்திற்காக நிலங்களை கையகப்படுத்துவதை கண்டித்து பாமக ஆர்ப்பாட்டம்
X

அன்புமணி ராமதாஸ், பைல் படம்

செய்யாறு பகுதியில். சிப்காட் விரிவாக்கத்திற்காக விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை கண்டித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பாமக தொண்டர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து அன்புமணி ராமதாஸ் கூறுகையில்,

செய்யாறு பகுதியில் சிப்காட் விரிவாக்கம் என்ற பெயரில் 2200 ஏக்கர் பட்டா விலை நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதனை தமிழக அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். விளை நிலங்களை தமிழக அரசு கையகப்படுத்தக் கூடாது.

திருவண்ணாமலை போன்ற பின்தங்கிய மாவட்டத்தில் பொருளாதார வளர்ச்சியும், வேலை வாய்ப்பு நிச்சயம் தேவை என்பதுதான் எங்கள் கருத்து, இதில் மாற்று கருத்து கிடையாது. ஆனால் விவசாய நிலங்களை அழித்து வரும் தொழிற்சாலைகளை வேண்டாம் என்று தான் சொல்கிறோம்.

தமிழக அரசு விவசாயிகளுக்கும் தமிழக மக்களுக்கும் செய்யும் துரோகமாக இதை நான் பார்க்கிறேன்.

உலகில் உள்ள பல நாடுகளும் நான் சென்று வந்துள்ளேன். அதனால் முன்னேற்றம் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று எனக்கு நன்றாக தெரியும். விவசாயத்தை அழித்து முன்னேற்றம் என்பதெல்லாம் ஏமாற்று வேலை. நாளைக்கு உணவு உண்ண நமக்கு சோறு கிடைக்காது.

தமிழ்நாட்டில் கடந்த 45 ஆண்டுகளில் விவசாய நிலப்பரப்பு என்பது 36 விழுக்காடாக குறைந்துள்ளது. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் 42 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களை நாம் இழந்துவிட்டோம். விளைநிலங்களை எல்லாம் அழித்துவிட்டு நாளை நம்முடைய சந்ததியினர் சோற்றுக்கு என்ன செய்யப் போகிறார்கள்.

இங்கே இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசி, கீழ்பெண்ணாத்தூர், போளூர், செங்கம் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் ஏராளமான தரிசு நிலங்கள் உள்ளன. அங்கே கொண்டு வாருங்கள் உங்களுடைய தொழிற்சாலைகளை,

மூன்று போகங்கள் விளையக்கூடிய இந்த பொன்னான மண்ணை வீணாக்கி இதில் தொழிற்சாலை கொண்டுவர எப்படி ஆட்சியாளர்களுக்கு மனம் வருகிறது? என்று கேள்வி எழுப்பினார். விவசாயத்தை அழித்து வரும் எந்த முன்னேற்றமும் நமக்கு வேண்டாம், இது உண்மையான முன்னேற்றம் கிடையாது.

இப்பகுதி மக்களுக்கு விவசாயத்தை விட்டால் வேறு தொழில் தெரியாது, விவசாயத்தை ஒழித்து கட்டினால் இந்த மக்கள் அகதிகளாக தான் செல்ல வேண்டும். எனவே தமிழக அரசு தங்களுடைய கொள்கை முடிவை திருத்திக்கொள்ள வேண்டும் இல்லை என்றால் பாமக இந்த விஷயத்தை சும்மா விடாது தொடர்ந்து போராடும். அதனால் விவசாயிகள் தைரியமாக இருங்கள் உங்கள் நிலங்களை எடுக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம். என அன்புமணி ராமதாஸ் கூறினார்.

Updated On: 23 Nov 2023 3:00 AM GMT

Related News