/* */

பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு பல் பரிசோதனை பயிற்சி முகாம்

Dental Check Up Camp -நகராட்சி பள்ளி மற்றும் அரசு கல்லூரியில் ரத்த சோகை மற்றும் பல் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு பல் பரிசோதனை பயிற்சி முகாம்
X

நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மருத்துவ முகாம்.

Dental Check Up Camp -திருவண்ணாமலை நகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தையொட்டி, திருவண்ணாமலை முத்துக்கள் ரோட்டரி சங்கம், தனபாக்கியம் மருத்துவமனை சாா்பில் நடைபெற்ற இந்த முகாமுக்கு, ரோட்டரி சங்கத் தலைவா் வனிதா தலைமை வகித்தாா்.

ரோட்டரி மாவட்ட திட்டங்கள் செயலா் சதாசிவம் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு முகாமைத் தொடக்கி வைத்தாா்.

500-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகளுக்கு பல், ரத்தசோகை மற்றும் பொது மருத்துவப் பரிசோதனைகளை மருத்துவா் வெங்கடேஷ் தலைமையிலான மருத்துவக் குழுவினா் பல், ரத்தசோகை மற்றும் பொது மருத்துவப் பரிசோதனைகளை செய்து உரிய சிகிச்சையும், ஆலோசனையும் வழங்கினா்.

இதில், பள்ளித் தலைமை ஆசிரியை ஜோதி, சங்கத் தலைவா் வனிதா, செயலா் கெளரி, நிா்வாகச் செயலா் ராஜலட்சுமி, பொருளாளா் பிரபாவதி, இயக்குநா் சேஷமால், முன்னாள் தலைவா் சாந்தி ராஜன்பாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்

திருவண்ணாமலையை அடுத்த வாழவச்சனூரில் அமைந்துள்ள அரசு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், வளரிளம் பெண்களுக்கான ரத்தசோகை தடுப்பு விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மூன்சிட்டி ரோட்டரி சங்கம், லைட்சிட்டி ரோட்டரி சங்கம், அரசு மருத்துவக் கல்லூரி, தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகம், வாழவச்சனூா் அரசு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் நடைபெற்றது.

இந்த முகாமுக்கு, கல்லூரி முதல்வா் நா.முத்துக்கிருஷ்ணன் தலைமை வகித்தாா். திருவண்ணாமலை லைட்சிட்டி ரோட்டரி சங்கத் தலைவா் கே.சுப்புலட்சுமி, மூன்சிட்டி ரோட்டரி சங்கத் தலைவா் எஸ்.டி.தனக்கோடி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

உடல்நலத்தைக் காப்பதற்கான வழிமுறைகள், ரத்தசோகையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் யோகா மற்றும் இயற்கை மருத்துவா் வனிதா, ஓமியோபதி மருத்துவா் பிருந்தா சந்தோஷ்பாபு ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்து கொண்டு உடல் நலத்தை காப்பதற்கான வழிமுறைகள் குறித்து விளக்க உரையாற்றினர்.

தொடா்ந்து, ரத்தசோகையால் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கான இயற்கை நலப்பெட்டகங்கள் வழங்கப்பட்டன.

இதில், கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் வி.அருண்குமாா் மற்றும் கல்லூரி மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு கல்வி வட்டம் செங்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் உலக பெண்கள் குழந்தை தினத்தை ஒட்டி சிறப்பு பல் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

இதில் செய்யாறு நகர ரொட்டி சங்க தலைவர் லோகநாதன் தலைமை வகித்தார் சிறப்பு விருந்தினராக செய்யாறு கல்வி மாவட்ட அலுவலர் எல்லப்பன் மருத்துவ முகாமில் தொடங்கி வைத்து பேசினார்.

பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கமலக்கண்ணன் ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

மருத்துவர்கள் சசிதரணி பிரியதர்ஷினி சுனில் ஆகியோர் தலைமையிலான மருத்துவ குழுவினர் 314.

மாணவிகளுக்கு பல் பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சை அளித்து மருந்துகள் வழங்கினர்.

மேலும் பல பாதுகாப்பு குறித்து ஆலோசனைகளை வழங்கினர் மாணவிகள் அனைவரும் பற்பசை பிரஷ் இலவசமாக வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் அன்பரசு ரோட்டரி சங்க நிர்வாகிகள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 13 Oct 2022 6:52 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  2. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  3. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  4. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  5. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  6. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  8. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  9. திருப்பரங்குன்றம்
    கூடலகப் பெருமாள் கோயில், வைகாசிப் பெருந் திருவிழா!
  10. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...