/* */

சாத்தனூர் அணை பூங்காவில் மீண்டும் ரயில் வசதி: பாஜக வேட்பாளர் உறுதி

சாத்தனூர் அணை பூங்காவில் மீண்டும் ரயில் வசதி ஏற்படுத்தித் தரப்படும் என பாஜக வேட்பாளர் வாக்கு சேகரிப்பின் போது உறுதியளித்தார்

HIGHLIGHTS

சாத்தனூர் அணை பூங்காவில் மீண்டும் ரயில் வசதி: பாஜக வேட்பாளர் உறுதி
X

பாஜக வேட்பாளருக்கு கிரேன் மூலம் மாலை அணிவித்து மலர் தூவி வரவேற்ற கிராம மக்கள்

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் வேட்பாளராக போட்டியிடும் பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன் தண்டராம்பட்டு பகுதி கிராமங்களான கீழ் வணக்கம் பாடி, கண்ண கந்தல், நெடுங்கவாடி, தரடா பட்டு ,சாத்தனூர், பாளையம், புதூர் ,பக்கிரி பாளையம் ,செக்கடி, மேல் பாய்ச்சல், கீழ் பாய்ச்சல் ,அருவங்காடு, நாராயண குப்பம், பெருங்குளத்தூர், வாழவச்சனூர்,கிருஷ்ணாபுரம் , தென் முடியனுர்,ரங்கநாதபுரம், நெல்லிக்குப்பம், ஆகிய கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தாமரை சின்னத்திற்கு வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்து மக்கள் பணியாற்ற வாய்ப்பு வழங்கினால் தமிழ்நாட்டிலேயே சிறந்த சுற்றுலாத் தளம் என்ற நிலையை சாத்தனூர் அணை சுற்றுலா தலமாக எட்ட நடவடிக்கை எடுப்பேன்.

சாத்தனூர் அணையை மேம்படுத்தி சிறந்த சுற்றுலா தலமாக மாற்ற பாராளுமன்றத்தில் குரல் கொடுத்து இப்பகுதியை மேம்படுத்துவேன்.

மேலும் இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ள சாத்தனூர் அணை தூர்வாரப்பட்டு மூன்று மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாய பணிகளுக்கு தேவையான நீர் தங்கு தடையின்றி கிடைக்க வழிவகை செய்வேன்.

மேலும் சாத்தனூர் அணை பூங்காவில் சுற்றுலா பயணிகள் மகிழும் வகையில் நீராவி எஞ்சின் பொருத்தப்பட்ட சுற்றுலா ரயில் நவீன வசதிகளுடன் கூடிய தங்கும் அறைகள், உணவகம், விளையாட்டு பூங்கா, ஆகியவை சாத்தனூர் அணையில் அமைக்கப்படும். சாத்தனூர், தண்டராம்பட்டு தானிப்பாடி ஆகிய பகுதிகளில் உள்ள மலை கிராமங்களுக்கு செல்ல தார் சாலை அமைத்து தரப்படும், மலை கிராம மக்களுக்கு தரமான மருத்துவ வசதிகள் கிடைக்க நடவடிக்கை எடுத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைத்து தருவேன் என பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன் பேசினார்.

இந்த பிரச்சாரத்தில் பாஜக மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன், பாமக நிர்வாகிகள், பாஜக பாமக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், ஒன்றிய கழகச் செயலாளர்கள் ,உள்ளாட்சி பிரதிநிதிகள் ,தொண்டர்கள் உள்ளிட்டோர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக பனை ஓலை பாடி கிராமத்தில் வாக்கு சேகரிக்க வருகை தந்த பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமனுக்கு 15 அடி நீளமான மாலை அணிவித்தும் மற்றும் 500 கிலோ பூக்கள் கொண்டு கிரேன் மூலம் பூக்கள் தூவப்பட்டு அப்பகுதி கிராம மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

Updated On: 13 April 2024 3:04 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வீடியோ
    Mamtha-வை கலங்கடித்த வீரமங்கை! யார் இந்த Rekha Patra? #SandeshKali...
  3. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மே தின விழா கொண்டாட்டம்
  5. குமாரபாளையம்
    குரு பெயர்ச்சி யாக பூஜை வழிபாடு
  6. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  7. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  8. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  9. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  10. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...