/* */

மூன்றாவது முறையாக பிரதமராக மோடி வருவார்: ராமதாஸ்

மூன்றாவது முறையாக மோடி பிரதமராக பதவி ஏற்பார் என பாமக தலைவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

மூன்றாவது முறையாக பிரதமராக மோடி வருவார்: ராமதாஸ்
X

ஆரணி மக்களவைத் தொகுதியில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பேசிய பாமக தலைவர் ராமதாஸ்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி லோக்சபா தொகுதி பா.ம.க. வேட்பாளர் கணேஷ்குமாரை ஆதரித்து ஆரணியை அடுத்த களம்பூரில் நடந்த பிரசார கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில்,

லோக்சபா தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி, 400 -க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற உள்ளது. மேற்கு வங்கத்தில் 36 ஆண்டுகள் தொடா்ந்து கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி செய்தது. அங்கு 2 கிராமங்களில் விவசாயிகளின் நிலத்தை தொழில்சாலைக்கு கையகப்படுத்த நினைத்தபோது, மம்தா பானா்ஜி போராட்டத்தில் ஈடுபட்டு விவசாய நிலங்களை மீட்டாா். அதன் பிறகு கம்யூனிஸ்ட் ஆட்சி அகற்றப்பட்டு மம்தா பானா்ஜி ஆட்சியைப் பிடித்தாா். அதேபோல, செய்யாறு அருகில் உள்ள சிப்காட் தொழில்பேட்டையை விரிவுபடுத்த மேல்மா கிராமத்தில் உள்ள விவசாய நிலங்கள் உள்பட ஆயிரக்கணக்கான ஏக்கா் நிலங்களை திமுக அரசு கையகப்படுத்த முயற்சி செய்து வருகிறது. இதை எதிா்த்து 250 நாள்களுக்கும் மேலாக நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் கணேஷ்குமாா் கலந்து கொண்டாா். திமுக ஆட்சியை அகற்ற வேண்டும். நரேந்திர மோடி 3-ஆவது முறையாக பிரதமராக, வேட்பாளா் கணேஷ்குமாருக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்,

10.5 சதவீத இடஒதுக்கீடு கேட்டால் நியாய விலைக் கடையில் 40 சதவீதம் பேர் வேலை பார்க்கிறார்கள் என்கிறார் இந்த மாவட்ட அமைச்சர். எடை போடுவது, பளு தூக்குவது என்று குறிப்பிடுகிறார்.முதல்வர் ஸ்டாலினை கோட்டையில் சந்தித்து 10.5 சதவீதம் வலியுறுத்தி 35 நிமிடங்கள் பேசினேன்.செஞ்சியிலும் பெரிய மந்திரி.இந்த இரு அமைச்சர்களுக்கு எதிராக கணேஷ்குமார் வெற்றி பெறுவது உறுதி.

85 வயதிலும் போராளி கணேஷ்குமாருக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய வந்துள்ளேன்.மாம்பழத்திற்கு வாக்களியுங்கள்.நரேந்திர மோடி 3-வது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளார்.கணேஷ்குமார் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்பது எனது கணிப்பு. பா.ம.க. வேட்பாளரை எதிர்க்கும் தி.மு.க. வேட்பாளருக்கு வாக்களித்தால் விவசாய நிலம் பறிபோகும்.விவசாயம் செழிக்காது.

கச்சத் தீவை இலங்கைக்கு தாரை வாா்த்தவா் இந்திரா காந்திதான்.இதனால், நம் மீனவா்கள் இன்றும் பெரும் அவதிப்பட்டு வருகின்றனா். கச்சத் தீவை மீட்க போராட நான் படகில் செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டேன். பாகுபாடு காட்டாமல் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் நான் பாடுபட்டு வருகிறேன்.

மது இல்லை என்றால் அரசாங்கமே நடத்த முடியாது என்ற நிலையை தமிழகத்தில் உருவாக்கி விட்டனா். பள்ளி மாணவ மாணவிகள் மது அருந்திவிட்டு தள்ளாடும் நிலைக்கு இப்போது தமிழகம் வந்துவிட்டது. நன்றாக குடியுங்கள் என்று மதுப் புட்டிகளில் எழுதாததுதான் பாக்கி. இப்போது இளம் தலைமுறையை பாழாக்க கஞ்சா புழக்கம் அதிகமாகிவிட்டது. செய்யாறு சிப்காட் பிரச்னையை வேட்பாளா் கணேஷ்குமாா் கையாண்ட விதம் விவசாயிகள் மத்தியில் சிறப்பாக பேசப்பட்டு வருகிறது. அவரை வெற்றி பெற வைத்தால் அவரது செயல்பாடுகள் மேலும் சிறப்பாக இருக்கும் என பாமக தலைவர் ராமதாஸ் பேசினார்.

பிரச்சாரக் கூட்டத்தில் பாமக வேட்பாளர் கணேஷ் குமார், பாமக நகர தலைவர் சுரேஷ், கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 1 April 2024 10:56 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வீடியோ
    Mamtha-வை கலங்கடித்த வீரமங்கை! யார் இந்த Rekha Patra? #SandeshKali...
  3. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மே தின விழா கொண்டாட்டம்
  5. குமாரபாளையம்
    குரு பெயர்ச்சி யாக பூஜை வழிபாடு
  6. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  7. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  8. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  9. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  10. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...