/* */

கண்ணமங்கலம் அருகே வேன் மோதிய விபத்தில் அக்கா கண் முன்னே தங்கை உயிரிழப்பு

கண்ணமங்கலம் அருகே வேன் மோதிய விபத்தில் அக்கா கண் முன்னே த பள்ளி மாணவி உயிரிழந்தார்.

HIGHLIGHTS

கண்ணமங்கலம் அருகே வேன் மோதிய விபத்தில் அக்கா கண் முன்னே தங்கை உயிரிழப்பு
X

பைல் படம்.

ஆரணி அடுத்த கண்ணமங்கலம் அருகே உள்ள அம்மாபாளையம் காமராஜ் நகர் பகுதியைச் சேர்ந்த தனியார் வாகன ஓட்டுனர் லோகநாதன் இவருடைய மனைவி ஜெயந்தி.

இவரது மகள்கள் ஜெயசுதா கண்ணமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகின்றாள். டெல்லி ராணி கண்ணமங்கலம் அரசு ஆரம்பப் பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

நேற்று மாலை ஜெயசுதா மற்றும் டெல்லி ராணி ஆகியோர் பள்ளி முடிந்து வீடு திரும்பி, வீட்டிலிருந்த ஸ்கூட்டி இரண்டு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு கண்ணமங்கலம் பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்றுள்ளனர். இரண்டு சக்கர வாகனத்தை ஜெயசுதா ஓட்டி சென்றுள்ளார் பின்னால் டெல்லி ராணி அமர்ந்து சென்றார்.

திருவண்ணாமலை வேலூர் நெடுஞ்சாலையில் வாகனம் சென்று கொண்டிருந்தபோது முன்னாள் சென்ற சரக்கு வாகனம் 2 சக்கரம் வாகனம் வருவதை கவனிக்காமல் வலது புறமாக ஓட்டுநர் வாகனத்தை இயக்கி உள்ளார்.

சரக்கு வாகனம் திரும்புவதை அறியாமல் பின்னால் இரண்டு சக்கர வாகனத்தில் வந்த ஜெயசுதா மற்றும் டெல்லி ராணி மீது சரக்கு வாகனம் மோதி, சக்கரத்தில் டெல்லி ராணி சிக்கி துடித்து இறந்துள்ளார்.

பலத்த காயமடைந்த ஜெயசுதாவை பொதுமக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்த பதப்பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக லோகநாதன் கண்ணமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அல்லிராணி, சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 5 Feb 2023 1:54 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வீடியோ
    Mamtha-வை கலங்கடித்த வீரமங்கை! யார் இந்த Rekha Patra? #SandeshKali...
  3. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மே தின விழா கொண்டாட்டம்
  5. குமாரபாளையம்
    குரு பெயர்ச்சி யாக பூஜை வழிபாடு
  6. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  7. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  8. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  9. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  10. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...