/* */

முதுகில் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

Amman Kovil -கங்கை அம்மன் திருவிழாவில் முதுகில் அலகு குத்திய பக்தர்கள் அந்தரத்தில் பறந்தவாறு அம்மனுக்கு மாலை அணிவித்து நேர்த்திக்கடன் செலுத்தினார்.

HIGHLIGHTS

Amman Kovil | Amman Temple
X

முதுகில் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்.

Amman Kovil -ஆரணி அருகே ஆக்ராபாளையம் கிராமத்தில் உள்ள கங்கை அம்மன் திருக்கோயிலில் ஆடி திருவிழா மற்றும் அம்மனுக்கு கூழ் வார்த்தல் உற்சவம் நடைபெற்றது. நேற்று பெண்கள் தங்கள் குடும்பத்துடன் அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அதனைத்தொடர்ந்து பல்வேறு வேடமிட்டும் பக்தர்கள் முதுகில் அலகு குத்தி கொண்டு அறுவடை எந்திரம், பொக்லைன் எந்திரம், வேன், சாமி தேர் ஆகியவைகளை இழுத்து வந்தனர். பக்தர்கள் முதுகில் அலகு குத்திக் கொண்டு அந்தரத்தில் பறந்தவாறு சென்று அம்மனுக்கு பரவசத்துடன் மாலை அணிவித்து நேர்த்திக்கடன் செய்தனர். அலங்கரிக்கப்பட்ட உற்சவ மூர்த்திகள் திருத்தேர் திருவீதி உலா நேற்று இரவு நடைபெற்றது. ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர். திருவிழாவில் மருத்துவ குழுவினர், காவல் துறையினர், மின்சார துறை, வருவாய்த்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 22 Aug 2022 10:46 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்