/* */

தென்காசி மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் 14 வயதிற்குட்பட்ட கிரிக்கெட் வீரர்கள் தேர்வு

தென்காசி மாவட்ட கிரிக்கெட் சங்க பயிற்சி மையத்தில் வருகிற 21-ம் தேதி 14 வயதிற்குட்பட்ட கிரிக்கெட் வீரர்கள் தேர்வு நடைபெறுகிறது.

HIGHLIGHTS

தென்காசி மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் 14 வயதிற்குட்பட்ட கிரிக்கெட் வீரர்கள் தேர்வு
X

தென்காசி மாவட்ட கிரிக்கெட் சங்க செயலர் ஸ்ரீநாத் ராமன்.

தென்காசியை அடுத்துள்ள கணக்கப்பிள்ளைவலசை பிரிமியர் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் தென்காசி மாவட்ட கிரிக்கெட் சங்க பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. தென்காசி மாவட்ட கிரிக்கெட் சங்க செயலர் ஸ்ரீநாத் ராமன் விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் மாவட்ட அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டிக்கு 14 - வயதுக்கு உட்பட்டோருக்கான மாவட்ட கிரிக்கெட் வீரர்கள் தேர்வு வருகிற 21-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கிழமை நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்பவர்கள் 01.09.2008 க்கு பின் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். கண்டிப்பாக தென்காசி மாவட்ட வீரர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும், வரும்போது வெள்ளை நிற சீருடையுடன், ஷூ அணிந்து வர வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

21-ம் தேதி காலை 8 மணிக்கு நடைபெற உள்ள வீரர்களின் தேர்வுக்கு வருவோர் ஆதார் மற்றும் பிறப்பு சான்றிதழ் கண்டிப்பாக கொண்டு வர வேண்டும் எனவும், நுழைவு கட்டணம் ஏதும் கிடையாது எனவும் குறிப்பிட்டார். மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவர்கள், கிராமப்புற ஏழை, எளிய மாணவர்கள் அதிக அளவில் கலந்து கொண்டு தங்களின் திறனை காண்பித்து இந்த கிரிக்கெட் வீரர்களின் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்றும் தென்காசி மாவட்ட கிரிக்கெட அசோசியேசன் செயலர் ஸ்ரீராம் ராமன் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Updated On: 20 Aug 2022 3:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?