/* */

ஆரணி சில்க் சிட்டி: சிறப்புப் பார்வை

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி சில்க் சிட்டி பற்றிய ஒரு சிறப்புப் பார்வை

HIGHLIGHTS

ஆரணி சில்க் சிட்டி:  சிறப்புப் பார்வை
X

ஆரணி பட்டு நெசவு 

ஆரணி நகராட்சி திருவண்ணாமலை மாவட்டத்தில், ஆரணி வட்டத்தில் மற்றும் ஆரணி வருவாய் கோட்டத்தில் அமைந்துள்ளது. 33 நகராட்சி மன்ற உறுப்பினர்களுடன் கூடிய தேர்வு நிலை நகராட்சியும் உள்ளது

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 3 வருவாய் கோட்டங்களில் இரண்டாவது வருவாய் கோட்டமான வருவாய் கோட்டம் மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் ஆகியவை இங்கு அமைந்துள்ளது. தற்போது புதிய பல்கலைக்கழகப் பொறியியற் கல்லூரி இங்கு அமைந்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 12 முக்கிய நகரங்களில் ஆரணி இரண்டாவது பெரிய நகரமாகும். இங்கு காஞ்சிபுரத்திற்கு அடுத்தப்படியாக பட்டுப்புடவைகள் மற்றும் பொன்னி ரக அரிசி வகைகளுக்கும் பெயர் பெற்றது இந்த ஆரணி நகரம். ஆரணி பட்டுப்புடவைகளுக்கு பெயர் பெற்றிருப்பதனால் ஆரணியை பட்டு நகரம் (ஆரணி சில்க் சிட்டி) எனவும் அழைப்பர். அது மட்டுமல்லாமல் திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிக வருவாய் ஈட்டித்தரும் நகரமாக ஆரணி நகரம் உள்ளது. தமிழ்நாட்டில் மிக அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களின் பட்டியலில் ஆரணி 76 வது பெரிய நகரமாக அமைந்துள்ளது. ஆரணி பட்டு சேலை யானது புவிசார் குறியீடு பெற்று தேசிய விருதும் பெற்றுள்ளது.

ஆரணி 1921 ஆம் ஆண்டு மூன்றாம் நிலை நகராட்சியாக உருவாக்கப்பட்டது. 1951 ஆம் ஆண்டு இரண்டாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. 1987 ஆம் ஆண்டு முதல் நிலை நகராட்சியாகவும் தரம் உயர்த்தப்பட்டது.

2008 ஆம் ஆண்டு முதல் தேர்வு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு இன்று வரை செயல்பட்டு வருகிறது. ஆரணி,தமிழ்நாட்டில் உள்ள ஒரு சிறந்த தேர்வு முதல் நிலை நகராட்சி ஆகும். இந்த நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன.

தற்போதைய நகராட்சி ஆணையாளராக பெ .தமிழ்செல்வி பொறுப்பேற்றுள்ளார்

ஆரணியின் புறநகர் பகுதிகளான விஜய நகரம், இரும்பேடு, பையூர், வடுகசாத்து, விளை சித்தேரி, தச்சூர், ராட்டிணமங்கலம், அண்ணா நகர், முள்ளிப்பட்டு, ஹவுசிங் ஃபோர்டு, சேவூர், அக்ரா பாளையம், மெய்யூர், அடையபுலம், வேலப்பாடி, ஆகிய பகுதிகள் அமைந்துள்ளது. இந்த பகுதிகள் ஆரணி நகரை சார்ந்து அமைந்துள்ளது. இந்த பகுதிகளை ஆரணி நகராட்சி எல்லைக்குள் வரும்படி சேர்க்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கை. அப்படி இந்த பகுதிகளை ஆரணி நகராட்சியுடன் சேர்த்தால் ஆரணியானது பெருநகராட்சியாகவோ அல்லது மாநகராட்சியாகவோ வழி வகுக்கும். திருவண்ணாமலை மாவட்டத்தை இரண்டாக பிரித்து ஆரணியை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் மாவட்டம் உருவாக்க வேண்டும் என்று ஆரணி மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது

நடைபெறவுள்ள நகர்புற உள்ளாட்சித்தேர்தலில் இந்த நகராட்சி பொதுப்பிரிவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது

மொத்த வார்டுகள் 33

எஸ்சி வார்டுகள் 11, 23

எஸ்சி பெண்கள் வார்டுகள் 21, 24

பெண்கள் பொதுப்பிரிவு வார்டுகள் 5, 6, 8, 9, 10, 12, 17, 18, 19, 20, 22, 28, 29, 31, 32

Updated On: 28 Jan 2022 7:06 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குடும்ப உறவாகும் நட்பு..! இருபக்க மகிழ்ச்சி..!
  2. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ் MLA ரூபி மனோகரன் செய்தியாளர் சந்திப்பு | Ruby...
  3. வீடியோ
    அதெல்லாம் அவுங்க விருப்பம்!மிஷ்கினுக்கு அறிவுரை சொன்ன முதியவர்! சொல்ல...
  4. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர் சந்திப்பு |...
  5. வீடியோ
    என்னைய கோவிலுக்கு போக கூடாதுன்னு சொல்ல அவர் யாரு?...
  6. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் நாளை நீட் தேர்வு; 6,120 பேர் பங்கேற்க வாய்ப்பு
  7. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  8. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  9. வீடியோ
    கடவுள் நம்பிக்கை இருக்கிறது தப்பில்லையே! | #mysskin | #hinduTemple |...
  10. வீடியோ
    உன்ன யாருடா தடுத்து நிறுத்துனா? | வெறியான சந்தானம் |...