/* */

ஆரணி: அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்டு டாக்டரின் தம்பி தற்கொலை

ஆரணியில் அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்டு டாக்டரின் தம்பி தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

ஆரணி: அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்டு டாக்டரின் தம்பி தற்கொலை
X

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருணகிரி சத்திரம் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 48). இவர் ஆரணி புது மசூதி தெருவில் உள்ள இவரது அண்ணன் நக்கீரன் மருத்துவமனையில் மருந்துக்கடை நடத்தி வந்தார். இதில் நஷ்டம் ஏற்பட்டதால் மருந்து கடையை விட்டு விட்டு, அதே மருத்துவமனையில் உள்ள மருந்துக்கடையில் மருந்தாளராக இருந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று இரவு அவரது அண்ணன் டாக்டர் நக்கீரன் வீட்டுக்குச் சென்றதும், பாஸ்கர் மருந்து கடையை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு அதிக அளவில் மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். அப்போது, அவர் கதவில் எட்டி உதைக்கும் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் உடனடியாக ஆரணி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

நிலைய அலுவலர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சென்று, கேட்டை உடைத்து பாஸ்கரை உயிருடன் மீட்டு, ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

Updated On: 27 April 2022 4:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பன்முகத்திறனில் தனித்த அடையாளம், சட்டமேதை அம்பேத்கர்..!
  2. லைஃப்ஸ்டைல்
    நீதியின் பக்கம் நில்லுங்கள்..! நீதி கிடைக்கும்..!
  3. ஈரோடு
    ஈரோட்டில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை, பிரார்த்தனை
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை தொடர் உயர்வு
  5. வீடியோ
    🔴LIVE : வைரமுத்து இளையராஜா விவகாரம்! பொங்கி எழுந்த பாடலாசிரியர்...
  6. ஈரோடு
    சென்னிமலை எம்.பி.என்.எம்.ஜெ. பொறியியல் கல்லூரியில் தேசிய தொழில்நுட்பக்...
  7. வீடியோ
    கோவிலுக்கு செல்வதால் யாருக்கு லாபம்! #mysskin|#hinduTemple|#hindu |...
  8. லைஃப்ஸ்டைல்
    தோல்வி கண்டு துவளாதீர்..! வீழ்ச்சி எழுச்சிக்கான முயற்சி..!
  9. லைஃப்ஸ்டைல்
    உனை பிரியாத வரவேண்டும் என்னுயிரே..!
  10. ஈரோடு
    வெளிநாட்டில் வேலை: கொங்கு கலை அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு