/* */

தைப்பூச திருநாளில் பக்தர்கள் இன்றி வெறிச்சோடியது திருத்தணி முருகன் கோயில்

அரசின் தடை உத்தரவு காரணமாக தைப்பூச திருநாளில் பக்தர்கள் இன்றி வெறிச்சோடியது திருத்தணி முருகன் கோயில்.

HIGHLIGHTS

தைப்பூச திருநாளில் பக்தர்கள் இன்றி வெறிச்சோடியது திருத்தணி முருகன் கோயில்
X

பக்தர்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது திருத்தணி முருகன் கோயில்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற திருக்கோயில் ஆகும். இந்த கோயில் முருகப் பெருமானின் ஐந்தாம் படை திருத்தலமாகும். கொரோனா பிரச்சினை காரணமாக இக்கோயிலில் தைப்பூச நிகழ்ச்சி கடந்த இரண்டு ஆண்டுகளாக பக்தர்கள் இன்றி நடைபெற்றது.

தற்போதும் தமிழக அரசு கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக திருக்கோயில்களை மூடுவதற்கு அரசு உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் இத்திருக்கோயிலும் மூடப்பட்டுள்ளது. முருகப்பெருமானுக்கு தைப்பூச நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்துகொண்டு பால்காவடி மற்றும் அலகு குத்திக் கொண்டு வருவார்கள். இந்த வருடம் பக்தர்களுக்கு அனுமதி இல்லாத காரணத்தால் பக்தர்கள் மலைக்கோயில் அடிவாரத்தில் உள்ள சரவணப்பொய்கை திருக்குளம் அருகில் படிக்கட்டுகளில் தீபம் ஏற்றி தேங்காய் உடைத்து வழிபட்டு சென்றனர். இதேபோல் மலைக்கோயில் படிக்கட்டுகளில் தடைகளை மீறி மேலே சென்ற சில பக்தர்கள் தேங்காய் உடை உடைத்து கற்பூரம் ஏற்றி கோபுர தரிசனம் செய்தனர்.

மேலும் அரக்கோணம் சாலையில் உள்ள திருக்கோயில் சார்பில் வைக்கப்பட்டுள்ள வேலிற்கு பூஜை செய்து பக்தர்கள் பயபக்தியுடன் வழிபட்டு சென்றனர். சில பக்தர்கள் திருக்கோயில் தடையை மீறி மலைக்கோயில் மாடவீதியில் சாமி தரிசனம் செய்ய குடும்பத்துடன் சென்றனர்,

திருக்கோயிலில் எப்போதும் வழக்கம் போல் ஒவ்வொரு வருடமும் நடைபெறும் தங்கத்தேர், கேடய உற்சவம், ஆகியவை இந்த ஆண்டு தமிழக அரசின் வழிகாட்டுதல் படி நிகழ்ச்சி எதுவும் நடைபெறவில்லை. மேலும் திருக்கோயில் வளாகப் பகுதியில் சிறப்பு போலீஸ் பாதுகாப்பு எதுவும் போடப்படவில்லை. அதனால் பக்தர்கள் எப்போதும் போல் மலையடிவாரத்தில் தரிசனம் செய்தனர்.

Updated On: 18 Jan 2022 10:40 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சித்தி வழிகாட்டினால் எதிலும் சித்தி பெறுவோம்..!
  2. சினிமா
    உண்டா: யதார்த்தத்தின் அழுத்தமான பிரதிபலிப்பு!
  3. வீடியோ
    பைபிள்படி ஆட்சியை நடத்துவோம் !Congress கொடுத்த வாக்குமூலம்!#congress...
  4. தொழில்நுட்பம்
    ஐபோன் மேல் மோகம்: விலை குறைப்பு!
  5. நாமக்கல்
    வெளியில் செல்வதை தவிர்க்க நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வேண்டுகோள்
  6. வீடியோ
    கொள்ளையடிக்க திட்டமிடும் Congress ! பாஜக நடக்கவிடாது !#congress #bjp...
  7. வீடியோ
    ஆந்திராவில் ஆரம்பித்த நில புரட்சி பூதானம் பஞ்சமி போன்றது !#Rsrinivasan...
  8. ஆன்மீகம்
    அன்பின் வடிவமாக எளிமையின் சின்னமாக இருப்பவர் சாய் பாபா..!
  9. சோழவந்தான்
    அலங்காநல்லூரில் அ.தி.மு.க. சார்பில் திறக்கப்பட்ட நீர்மோர் பந்தல்
  10. தொழில்நுட்பம்
    Realme C65 5G புதிய பட்ஜெட் போன்... சக்தி அதிகமா?