/* */

கிருஷ்ணா நதிநீர் திருப்பி விடப்பட்டதால் கண்ணன்கோட்டை ஏரிக்கு நீர்வரத்து

கிருஷ்ணா நதிநீர் திருப்பி விடப்பட்டதால் கண்ணன்கோட்டை ஏரிக்கு நீர் வரத்துவங்கி உள்ளது.

HIGHLIGHTS

கிருஷ்ணா நதிநீர் திருப்பி விடப்பட்டதால் கண்ணன்கோட்டை ஏரிக்கு நீர்வரத்து
X

கண்ணன் கோட்டை ஏரி (கோப்பு படம்).

கிருஷ்ணா நதிநீர் திருப்பி விடப்பட்டதால் கண்ணன்கோட்டை ஏரிக்கு நீர்வரத்து தொடங்கியது.

சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக 1983 ஆம் ஆண்டு தமிழக மற்றும் ஆந்திரா அரசு மேற்கொண்ட ஒப்பந்தத்தின்படி ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் சோம சிலை அருகே உள்ள கண்டல் ஏரி அணையில் இருந்து ஆண்டிற்கு 12 டி.எம்.சி. தண்ணீர் தமிழகத்திற்கு வழங்க வேண்டும். அதன்படி ஜூலை முதல் அக்டோபர் வரை 8.டி.எம்.சி. தண்ணீரும் ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4.டி எம் சி தண்ணீர் வழங்க திறந்து விடப்படும்.

இந்த தண்ணீரானது 157 கிலோ மீட்டர் பாய்ந்து திருவள்ளூர் மாவட்டம் பூண்டி பகுதியில் உள்ள சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் வந்து சேரும் இங்கிருந்து புழல், சோழவரம், செம்பரம்பாக்கம், உள்ளிட்ட ஏரிகளுக்கு கால்வாய்கள் மூலம் திறந்த விடப்பட்டு அங்கு சேமித்து வைத்து சுத்திகரிக்கப்பட்டு சென்னை மக்களின் குடிநீர் பிரச்சினை பூர்த்தி செய்யப்படும்.

தற்போது முக்கிய ஏரிகளில் தேவை அளவுக்கு தண்ணீர் இருப்பதால் கிருஷ்ணா கால்வாய் பல பகுதிகளில் பெரிய அளவில் சேதங்கள் ஏற்பட்டுள்ள இடங்களில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ஆந்திராவில் தண்ணீர் நிறுத்தப்பட்டது. தற்போது சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5ஆம் கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரி விளங்கி வருகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் கண்ணன்கோட்டை ஏரிக்கு நீர்வரத்து வரத்தொடங்கியது. ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டில் இருந்து பூண்டி ஏரிக்கு செல்லும் கிருஷ்ணா நதிநீர் திருப்பி விடப்பட்டதால் கண்ணன்கோட்டை ஏரிக்கு 55கனஅடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. 500 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியில் தற்போது 467 மில்லியன் கனஅடி நீர்இருப்பு உள்ளது. அடுத்த சில நாட்கள் தொடர்ந்து நீர்வரத்து இருந்தால் ஏரி முழுமையாக நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Updated On: 9 Feb 2023 6:47 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது!
  2. லைஃப்ஸ்டைல்
    ‘நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந் தென்றலே...’
  3. லைஃப்ஸ்டைல்
    புலிக்கு வாலாக இருப்பதைவிட எலிக்கு தலையாக இரு..!
  4. லைஃப்ஸ்டைல்
    கர்ப்பம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  5. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 14 அரசு பள்ளிகள் உள்பட 60...
  6. நாமக்கல்
    நாமக்கல் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம்...
  7. லைஃப்ஸ்டைல்
    யாரையும் நம்பாதே: சிறந்த 50 தமிழ் மேற்கோள்கள்!
  8. லைஃப்ஸ்டைல்
    நாமெல்லாம் மாஸ்.... தெரிஞ்சிக்கோங்க பாஸ்..!
  9. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் போக்குவரத்து காவல்துறை சார்பில் நிழற் பந்தல் அமைப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    சிதைந்த குடும்பம்..களைந்த கூடு..!