/* */

திருவள்ளூர் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் வேட்பு மனு தாக்கல்

திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி பிரபு சங்கரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

HIGHLIGHTS

திருவள்ளூர் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் வேட்பு மனு தாக்கல்
X

திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில்  வேட்பு மனு தாக்கல் செய்தார்.

திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதியை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல பாடுபடுவேன் என காங்கிரஸ் வேட்பாளரும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான சசிகாந்த் செந்தில் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் (தனி) நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான சசிகாந்த் செந்தில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளாா். இதனையடுத்து வேட்புமனு தாக்கல் செய்வதற்கான இறுதி நாளான இன்று கூட்டணி கட்சியான திமுக முன்னாள் அமைச்சரும் ஆவடி சட்ட மன்ற உறுப்பினருமான ஆவடி சா.மு.நாசர், திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன், பூந்தமல்லி சட்ட மன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி மற்றும் பொன்னேரி காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜன், திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் சந்திரன், மற்றும் மாநில, மாவட்டம், நகரம்,ஒன்றியம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் என ஏராளமான தொண்டர்களுடன் தெருக்கூத்து, மேளதாளத்துடன் வந்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான டாக்டர் .பிரபுசங்கரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சசிகாந்த் செந்தில் இந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால் மக்கள் பிரதிநிதியாகவும், முக்கியமாக மக்களின் பிரச்சனையை புரிந்து கொண்டு முதல் வேலையாக சரிசெய்ய பாடுபடுவேன் என்றும் திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதியை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வேன் எனவும் தெரிவித்துள்ளார்.

Updated On: 27 March 2024 9:37 AM GMT

Related News