/* */

பெரியபாளையத்தில் வருவாய் கிராம ஊழியர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை மாநாடு

கிராம உதவியாளர் பணி நியமனத்தை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்ப வேண்டும்

HIGHLIGHTS

பெரியபாளையத்தில் வருவாய் கிராம ஊழியர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை மாநாடு
X

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையத்தில் 14- அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி  நடைபெற்ற தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர்கள் சங்கத்தின் இரண்டாவது மாவட்ட கோரிக்கை மாநாடு

பெரியபாளையத்தில் 14- அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர்கள் சங்கத்தின் இரண்டாவது மாவட்ட கோரிக்கை மாநாடு நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர்கள் சங்கம் காலமுறையற்ற ஊதியம் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 2.வது மாவட்ட மாநாடு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் ரமேஷ் பாபு தலைமை வகித்தார். மாவட்டத் துணைத் தலைவர் சங்கர், மாவட்ட இணைச்செயலாளர் மணிகண்டன், மாவட்டத் துணைத் தலைவர் குணசேகரன், மாவட்ட இணை செயலாளர் திருவேங்கடம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில பொதுச் செயலாளர் எஸ்.இரவி, மாநில செயலாளர் கே.பெருமாள், மாநிலத் துணைத் தலைவர் ஆர்.ரவி,

ஊத்துக்கோட்டை தாசில்தார் அருண்குமார், மண்டல துணை வட்டாட்சியர் நடராஜன், மாநில தலைமை நிலை செயலாளர் ரகுவரன், மாநில பொருளாளர் சிவலிங்கம், முன்னாள் மாவட்ட பொருளாளர் சுப்பிரமணி, சென்னை நிர்வாகிகள் மாவட்ட தலைவர் மேகநாதன், கணேசன், அம்பேத்கர், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: வரையறுக்கப்பட்ட கால முறை ஊதியம் வழங்க வேண்டும். தேர்தல் வாக்குறுதியின்படி புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கிராம உதவியாளர் பணி நியமனத்தை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் நிகழ்ச்சியில் புதிய மாவட்ட நிர்வாகிகளை தேர்வு செய்து கௌரவிக்கப்பட்டது. முன்னதாக மாவட்ட செயலாளர் அருள் வரவேற்றார். முடிவில் மாவட்ட பொருளாளர் மதுரை கவி நன்றி கூறினார்.




Updated On: 18 Sep 2022 3:00 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    கோடை வெப்பத்தை எதிர்கொள்ள காவல்துறையினருக்கு சன் கிளாஸ்
  2. நாமக்கல்
    நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறை அலுவலர்கள் ரத்ததானம் வழங்கல்
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. நாமக்கல்
    சூறாவளிக்காற்றால் மின்கம்பம் முறிந்தது; இருளில் மூழ்கிய கிராமம்
  5. வந்தவாசி
    தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நீர் மோர் பந்தல்
  6. திருவண்ணாமலை
    நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
  7. செய்யாறு
    பிளஸ் 1 பொதுத்தேர்வில் 88.91 சதவீதம் பேர் தேர்ச்சி
  8. செய்யாறு
    செய்யாற்றில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  9. வீடியோ
    மனமுருகி சொன்ன இஸ்லாமிய மாணவி | Annamalai சொன்ன அந்த வார்த்தை |...
  10. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து