/* */

சென்னை புறநகர் ரயிலில் கத்தியை வைத்து மிரட்டிய கல்லூரி மாணவர் கைது

Chennai Electric Train -சென்னை புறநகர் ரயிலில் கத்தியை வைத்து மிரட்டிய கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

சென்னை புறநகர் ரயிலில் கத்தியை வைத்து மிரட்டிய  கல்லூரி மாணவர் கைது
X

கைது செய்யப்பட்ட கல்லூரி மாணவருடன் போலீசார் உள்ளனர்.

Chennai Electric Train -சென்னை பச்சையப்பன் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் புறநகர் ரயில்களில் பட்டாக்கத்தியை வைத்துக்கொண்டு பிளாட்பாமில் தேய்த்துக் கொண்டும் பயணிகளை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்வதாக சமூக வலைதளங்களில் குறுந்தகவல் மற்றும் வீடியோக்கள் பகிரப்பட்டு வந்த நிலையில் அதன் அடிப்படையில் திருவள்ளூர் ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் ரயில்வே இரும்புப்பாதை காவல்துறையினர் ஆய்வு செய்தனர்.

அப்போது திருவள்ளூர் ரயில் நிலைய நான்காவது நடைமேடையில் படியில் தொங்கியபடி பயணம் செய்த மாணவர்களை பிடித்தனர். அதில் திருவலங்காடு பகுதியைச் சேர்ந்த பச்சையப்பன் கல்லூரி மாணவன் தனுஷிடமிருந்து பட்டா கத்தி பறிமுதல் செய்து கைது செய்யப்பட்ட நிலையில் ஊத்துக்கோட்டை பகுதியைச் சேர்ந்த மதன் என்ற மாணவனை பிடிக்க முயன்றபோது தப்பி ஓடியுள்ளார். மதனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடப்பட்டு வருகின்ற நிலையில் மின்சார வண்டியில் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்வது பயணிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவது உள்ளிட்ட குற்றங்களுக்காக பச்சையப்பன் கல்லூரியை சேர்ந்த விஜயகுமார். அரக்கோணம் பாலா. ஊத்துக்கோட்டை தீபக். சந்தோஷ் குமார். திருவள்ளூர் ஆகாஷ் மற்றும் சரத் ஆகிய 6 பேரை பிடித்து எச்சரித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 23 Sep 2022 9:46 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மரணம், இயற்கையின் நீள்துயில்..!
  2. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை எனும் கவசம் அணியுங்கள்..! வாழ்க்கை வெற்றியாக அமையும்..!
  3. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை மட்டும் மன்னித்துவிடாதீர்கள்..!
  4. வீடியோ
    🔴LIVE : #vijay -ன் அரசியல் பிரவேசம் ! பகிர் கிளப்பிய #raghavalawrence...
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம், சுய கௌரவத்தின் அடையாளம்..!
  6. ஆன்மீகம்
    துறவறம் பூண்டதும் தூய வெள்ளாடை அணிந்த வள்ளலார்..!
  7. மதுரை மாநகர்
    ப்ளஸ் 2 தேர்வு: மதுரை மத்திய சிறையில் அதிக மதிப்பெண் ஒருவர் சாதனை
  8. வீடியோ
    சிறைக்குள் சென்ற அடுத்த பத்தாவது நிமிடமே Savukku Shankar-ன் எலும்பை...
  9. வீடியோ
    🔴LIVE :எல்லாமே சரியா இருக்கு! எதுக்கு சார் FINE மூச்சமூட்ட போராடிய...
  10. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்