/* */

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாஜக நிர்வாகி சிறைப்பிடிப்பு!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த பாஜக ஒன்றிய தலைவர் வீரமாசாரி சத்தமாக பேசியதால் போலீசை வைத்து 5.மணி நேரம் சிறைபிடிக்கப்பட்டார்.

HIGHLIGHTS

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாஜக நிர்வாகி சிறைப்பிடிப்பு!
X

ஆட்சியர் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளிக்க வந்த பாஜக திருத்தணி ஒன்றிய தலைவர் வீரமாசாரி சத்தமாக பேசியதாக மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் முதல் தளத்தில் உள்ள மூடப்பட்ட அவரது அலுவலக அறைக்கு எதிரே 5 மணி நேரத்திற்கு மேலாக காவல்துறை உதவியுடன் சிறை பிடிப்பு.

திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்களிடம் அதிகாரிகள் மனுக்களை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், நேற்று திருத்தணி பாஜக ஒன்றிய தலைவர் வீரமாச்சாரி என்பவர் மனு அளிக்க மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்துக்கு வந்திருந்தார். அவர், தனது பகுதியில் அரசு பள்ளி மற்றும் நீர் நிலைகளைத் தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார் எனவும், அவற்றை மீட்குமாறும் மனுவாக எழுதி கொண்டு வந்திருந்தார்.

மனுக்களை பெற்றுகொண்டிருந்த மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமாரிடம் தனது மனுவினைப் பற்றி கூறிக் கொண்டிருந்தபோது, பாஜக பிரமுகர் சத்தமாக பேசுவதாக கூறி பாஜக நிர்வாகியை காவல்துறை உதவியுடன் சிறைபிடித்தார்கள்.

அதே அலுவலகத்தின் முதல் தளத்தில் உள்ள அவரது அலுவலக அறையின் முன்பு காவல் துறையினர் பாதுகாப்புடன் சுமார் ஒரு மணியிலிருந்து 5 மணி வரை அமர வைத்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து இந்த தகவல் செய்தியாளர்களுக்கு தெரிய வந்ததை அடுத்து செய்தி சேகரிக்க சென்ற நிலையில், வருவாய் அலுவலக ஊழியர்கள் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் இடம் தகவல் தெரிவித்ததை அடுத்து. பாஜக நிர்வாகிடம் முகவரி பெற்றுக் கொண்டு காவல்துறையினர் அவரை அனுப்பி வைத்தனர் .

மனு கொடுக்க வந்த இடத்தில் சத்தமாக பேசியதாக பாஜக நிர்வாகியை 5. மணி நேரம் சிறைபிடித்து அமர வைத்திருந்த சம்பவம் பாஜகவினரிடையே பரபரப்பையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து கேட்பதற்கு மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது அவர் தொலைபேசியை எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 31 Oct 2023 4:32 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  4. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  6. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  7. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  9. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  10. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது