/* */

அனுமதி பெறாமல் நடத்தி வந்த சூப் தயாரிப்பு கூடத்துக்கு சீல்

பூந்தமல்லி கரையான்சாவடியில் அனுமதி பெறாமல் நடத்திவந்த சூப் தயாரிக்கும் தொழில் கூடத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

HIGHLIGHTS

அனுமதி பெறாமல் நடத்தி வந்த சூப் தயாரிப்பு கூடத்துக்கு சீல்
X

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அடுத்த கரையான்சாவடி பகுதியில், தனியாருக்கு சொந்தமான சூப் தயாரிக்கும் தொழில் கூடம் இயங்கி வந்தது. இங்கு பூந்தமல்லி, ஆவடி சுற்று வட்டார என பல்வேறு பகுதிகளில், இந்நிறுவனம் நேரடியாக சூப் கடைகளை நடத்தி வருகிறது. மேலும் பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளுக்கு சூப் தயார் செய்து வழங்கி வருகிறது.

இந்நிலையில், இந்த நிறுவனத்தின் கடையில் விற்பனை செய்யப்படும் சூப் தரமற்ற முறையில் தயாரித்து வருவதாகவும், மேலும் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்துவதாகவும் அதிகாரிகளுக்கு ஆன்லைனில் புகார்கள் வந்துள்ளன.

இதையடுத்து, உணவு பாதுகாப்புத்துறை கமிஷனர் செந்தில்குமார் உத்தரவின்பேரில் திருவள்ளுர் மாவட்ட உணவுப் பாதுகாப்பு துறை நியமன அலுவலர் ஜெகதீஸ் சந்திரபோஸ், பூந்தமல்லி உணவு பாதுகாப்பு அலுவலர் வேலவன் தலைமையிலான அதிகாரிகள் திடீரென சூப் தயாரிக்கும் கூடத்தில் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது, முறையாக அனுமதி பெறாமல் தொழிற்கூடம் நடத்தி வருவது தெரியவந்தது. இதுகுறித்து, சூப் தயாரிக்கும் நிறுவனத்திற்கு, ₹2 ஆயிரம் அபாரதமும் விதித்தனர். மேலும், மாநில உணவு பாதுகாப்பு துறையிடம் அனுமதி பெற்று தொழிற்கூடத்திற்கு சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Updated On: 23 March 2022 4:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புலிக்கு வாலாக இருப்பதைவிட எலிக்கு தலையாக இரு..!
  2. லைஃப்ஸ்டைல்
    கர்ப்பம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 14 அரசு பள்ளிகள் உள்பட 60...
  4. நாமக்கல்
    நாமக்கல் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம்...
  5. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் போக்குவரத்து காவல்துறை சார்பில் நிழற் பந்தல் அமைப்பு
  6. லைஃப்ஸ்டைல்
    சிதைந்த குடும்பம்..களைந்த கூடு..!
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்கள் 89 சதவீதம் தேர்ச்சி
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் ஆகாய கன்னி அம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண உற்சவம்
  9. ஈரோடு
    கொடுமுடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகங்களில் ஈரோடு...
  10. வீடியோ
    போராட்டங்களை மக்கள் மீது திராவிட அரசுகள் தினிக்குது !#protest #dmk...