/* */

பொன்னேரி அருகே நடந்த கொலை கொள்ளை வழக்கில் 6 மணி நேரத்தில் இளைஞர் கைது

பொன்னேரி அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை நகைக்காக கழுத்தறுத்து கொலை செய்த உறவினர் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

பொன்னேரி அருகே நடந்த கொலை கொள்ளை வழக்கில் 6 மணி நேரத்தில் இளைஞர் கைது
X

கைது செய்யப்பட்ட அசோக்

பொன்னேரி அருகே பட்டப்பகலில் ஐந்து சவரன் நகைக்காக வீட்டில் தனியாக இருந்த பெண் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 6மணி நேரத்தில் உறவினர் கைது செய்யப்பட்டார்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த கனகவல்லிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான குமார். இவரது மனைவி சரஸ்வதி ( வயது 55). இரண்டு மகள்களுக்கு திருமணமான நிலையில் கணவன், மனைவி இருவரும் தமது பேரக்குழந்தையுடன் வீட்டில் வசித்து வருகின்றனர். நேற்று காலை பேரன் பள்ளிக்கு சென்று விட்ட நிலையில் காலை உணவை முடித்துக் கொண்டு குமார் வெளியே சென்று விட்டார். நண்பகல் வந்து பார்த்தபோது சரஸ்வதி ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து கிடந்துள்ளார்.

கொலை செய்யப்பட்ட சரஸ்வதி.

இதனால் அதிர்ச்சி அடைந்த குமார் கூச்சலிட்டதின் பெயரில் இதனைக் கேட்ட அக்கம் பக்கத்தினர் குமார் வீட்டிற்கு ஓடிவந்தனர். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சரஸ்வதியை மீட்டபோது மூச்சு பேச்சின்றி கிடந்துள்ளார். இது குறித்து அளிக்கப்பட்ட தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த பொன்னேரி காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது சரஸ்வதியின் கழுத்தில் இருந்த தாலியில் ஒரு பகுதி கீழே கிடந்துள்ளது. மற்றொரு பாகமான ஐந்து சவரன் தாலி சரடு காணாமல் போய்விட்டது. பட்டப் பகலில் செயின் பறிப்பில் ஈடுபட வந்தபோது இந்த கொலை நடந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து கிராமங்களின் சுற்றுப்பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர் . வேறு ஏதேனும் முன் விரோதம் உள்ளதா எனவும் விசாரணை நடத்தி வந்த நிலையில் விசாரணையில் குமாரின் சகோதரி மகன் அசோக் ( வயது 30) பணம் கேட்டு சரஸ்வதி தராததால் தாலியை பறித்து கொண்டு கழுத்தறுத்து கொலை செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து கொலை நடந்த 6மணி நேரத்தில் அசோக்கை காவல்துறையினர் கைது செய்தனர்.

Updated On: 28 March 2024 10:02 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    மோடியை பார்த்து எதிர்க்கட்சிகள் கலங்குவதன் காரணம் என்ன?
  2. வேலூர்
    வாட்டி வதைக்கும் வெயில்! வேலூர் மக்கள் அவதி!
  3. தேனி
    பிரதமர் மோடி இவ்வளவு ஆவேசப்பட காரணம் என்ன?
  4. தமிழ்நாடு
    மாணவர்களை திட்டினால் கடும் நடவடிக்கை: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை!
  5. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகள் நடப்பது பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  6. லைஃப்ஸ்டைல்
    மௌனத்தின் வலிமை: அமைதியான ஆண்களைப் பற்றிய மேற்கோள்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    குழுவுணர்வு பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  8. திருமங்கலம்
    சித்திரை திருவிழாவை கண்முன் கொண்டுவந்து அசத்திய மதுரை மாணவர்கள்
  9. சேலம்
    மேட்டூர் அணையின் நீர்மட்டம் 53 அடியாக சரிவு
  10. வீடியோ
    கருப்பசாமி முன்பே உருவான சனாதனம் ! காந்தி சொன்ன உறுதிமொழி ! #gandhi...