கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. பிறந்தநாளை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம்

கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. கோவிந்தராஜ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. பிறந்தநாளை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம்
X

கும்மிடிப்பூண்டி கோவிந்தராஜ் எம்.எல்.ஏ. பிறந்த நாளையொட்டி இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

ஊத்துக்கோட்டை பேரூராட்சி 11.வது வார்டில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டி.ஜே கோவிந்தராஜ் பிறந்த நாளை முன்னிட்டு வேல்ஸ் தனியார் மருத்துவமனை சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை பேரூராட்சி 11வது வார்டில் 11வது வார்டு கவுன்சிலர் கோல்டுமணி ஏற்பாட்டில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டி.ஜே. கோவிந்தராஜின் பிறந்த நாளை முன்னிட்டு பெரியபாளையம் அடுத்த மஞ்சக் கரணி பகுதியில் அமைந்துள்ள வேல்ஸ் தனியார் மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் சிறப்பு அழைப்பாளர்களாக ஊத்துக்கோட்டை நகர தி.மு.க. செயலாளர் அபிராமி குமரவேல், ஊத்துக்கோட்டை பேரூராட்சி மன்ற தலைவர் அப்துல் ரஷீத் ஆகியோர் கலந்து கொண்டு மருத்துவ முகாமை குத்து விளக்கேற்றி வைத்து துவக்கி வைத்தனர்.

பத்துக்கும் மேற்பட்ட மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு இதில் பொது மருத்துவம், காது, மூக்கு, கண், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு இலவசமாக பரிசோதனை செய்தனர்.இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு தங்களை பரிசோதனை செய்து கொண்டனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மாத்திரை மருந்துள் இலவசமாக வழங்கப்பட்டது.

இதில் பேரூராட்சித் துணைத் தலைவர் குமரவேல், மாவட்ட தி.மு.க.இளைஞரணி துணை அமைப்பாளர் தில்லை குமார், பேரூராட்சி கவுன்சிலர்கள் அப்தாபேகம்,லோகேஷ், ரஹீம், கோகுலகிருஷ்ணன், பார்த்திபன், ஜீவா மற்றும் நெடுஞ்செழியன் வேல்ஸ் மருத்துவமனையின் மருத்துவக் குழுவினர் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 25 Jan 2023 7:39 AM GMT

Related News

Latest News

 1. தமிழ்நாடு
  பாரம்பரிய மற்றும் மலை வாழிட நகரங்களுக்கு 35 ஹைட்ரஜன் ரயில்களை இயக்க...
 2. தஞ்சாவூர்
  தஞ்சையில் தேசிய சிட்டிங் பாரா வாலிபால் போட்டிகள்
 3. லைஃப்ஸ்டைல்
  பர்சனாலிட்டியை நிர்ணயம் செய்வது எது? ஆள் பாதி...ஆடை பாதி:உங்களுக்கு...
 4. புதுக்கோட்டை
  முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க அழைப்பு
 5. தூத்துக்குடி
  தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் திடீர் போராட்டம்.. போலீஸ்...
 6. திருப்பரங்குன்றம்
  திருப்பரங்குன்றம் அருகே ரயில் பாலத்தில் மின்கசிவு: அதிருஷ்டவசமாக உயிர்...
 7. புதுக்கோட்டை
  புதுக்கோட்டை அருகே வெள்ளாற்றங்கரையில் தைப்பூச தீர்த்தவாரி
 8. விளாத்திகுளம்
  விளாத்திக்குளத்தில் மினி மாரத்தான் போட்டி.. 300-க்கும் மேற்பட்டோர்...
 9. திருநெல்வேலி
  நெல்லை மாவட்டத்தில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 4 பேர் கைது
 10. தூத்துக்குடி
  காவலர் பணிக்கான உடல்தகுதி தேர்வு நாளை தொடக்கம்.. ரயில்வே டிஐஜி...