/* */

விவசாயிகளின் வாழ்க்கையில் ஒளியேற்றி சாதனை படைத்தவர் முதல்வர் ஸ்டாலின்: அமைச்சர் நாசர்

CM News Today - ஒரே ஆண்டில் 1 லட்சம் இலவச மின் இணைப்பை வழங்கி விவசாயிகளின் வாழ்க்கையில் ஒளியேற்றி சாதனை படைத்தவர் முதல்வர் ஸ்டாலின் என ஆவடி சா.மு.நாசர் தெரிவித்தார்.

HIGHLIGHTS

CM News Today | Tiruvallur News
X

பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள்.

CM News Today - திருவள்ளூர் மத்திய மாவட்டம்,பூவிருந்தவல்லி நகர திமுக சார்பில் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 99 வது பிறந்த நாள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டம் பூவிருந்தவல்லி நகர பொருப்பாளர் ஜி.ஆர்.திருமலை தலைமையில் குமணன் சாவடியில் நடைபெற்றது. இதில் நகர்மன்ற தலைவர் காஞ்சனா சுதாகர் துணைத் தலைவர் ஸ்ரீதர் நகரக் கழக நிர்வாகிகள் சு.அன்பழகன், இ.பழனி, பி.ஆர்.பி. அப்பர் ஸ்டாலின் , டில்லிராணி மலர்மன்னன், பி.செளந்தரராஜன், இரா.புண்ணிகோட்டி, க.ஏழுமலை, ஜெ.சுதாகர் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

இந்த பொதுக்கூட்டத்தில் திருவள்ளூர் மத்திய மாவட்ட பொருப்பாளரும், பால்வளத்துறை அமைச்சருமான ஆவடி சா.மு.நாசர் கலந்து கொண்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புறை ஆற்றினார். அப்போது பேசிய அவர் தமிழுக்கும், தமிழக மக்களுக்காகவும் இரவு பகல் பாராமல் சிந்தித்து அவர்களுக்காக தன்னை அர்பணித்துக் கொண்ட ஒரே தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்றார். பெண்களின் வாழ்க்கையில் முன்னேற்றமடைய ஏராளமான திட்டங்களை கொண்டு வந்து தேர்தல் அறிக்கையில் சொன்னதையும், சொல்லாததையும் செய்து காட்டியவர் தலைவர் ஸ்டாலின் என்றார்.

கலைஞர் விவசாயிகளின் வாழ்க்கையில் ஒளியேற்ற இலவச மின்சாரதிட்டத்தை விவசாயிகளுக்கு கொண்டுவந்தார்.அதன் தொடர்ச்சியாக இன்று ஒரே ஆண்டில் 1 லட்சம் இலவச மின் இணைப்பை வழங்கி விவசாயிகளின் வாழ்க்கையில் ஒளியேற்றி சாதனை படைத்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்றும் அவரது ஆட்சி 25 ஆண்டுகாலம் நீடிக்கும் என்றார். அதனைத் தொடர்ந்து திமுக கொள்கைபரப்பு செயலாளரும், தமிழ் நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுகல் ஐ.லியோனி சிறப்புறை ஆற்றினார்.

அப்போது பேசிய அவர் இந்தியாவில் புறக்கணிக்கப்பட்ட பெண்களை பொது இடங்களில் நடமாட செய்ததும்,வாக்குரிமை பெற்று தந்ததும் திமுகவின் தாய் கட்சியான நீதி கட்சி அதன் தொடர்ச்சியாக டாக்டர் அம்பேத்கர் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை வழங்க வேண்டும் என்று தொடங்கிய போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தது திமுக ஆட்சி. முத்தமிழ் அறிஞர் கலைஞர் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை சட்டத்தை கொண்டு வந்தார்.அரசியல் களத்தில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடை பெற்றுதந்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்றார். தமிழகத்தில் 1000 பி.ஜே.பி வந்தாலும் திமுக வை தொட்டுகூட பார்க்கமுடியாது என்றார்.

இந்த நிகழ்சியின் போது இந்து முன்னனியிலிருந்து 15 க்கும் மேற்பட்டோர் நகரக் கழக பொறுப்பாளர் ஜி.ஆர்.திருமலை ஏற்பாட்டில் அமைச்சர் ஆவடி நாசர் முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். அவர்களுக்கு அமைச்சர் சால்வை அணிவித்து வரவேற்றார். பூவிருந்தவல்லி சட்ட மன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி மாநில மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் வட்ட கழக செயலாளர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கழக மூத்த முன்னோடிகள் அனைவரும் கலந்து கொண்டனர்கள்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 13 Jun 2022 6:21 AM GMT

Related News

Latest News

  1. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. வணிகம்
    ஓய்வுக்காலத்தில் நிம்மதியாக வாழ வேண்டுமா? அடடே ஐடியா!
  4. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  5. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  7. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  8. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  9. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  10. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை