பாப்பாகுடி திருக்கடுகை மூன்றீஸ்வரர் கோவிலில் நந்தவனம் மாதிரி தொடக்க விழா

நெல்லை பாப்பாகுடி திருக்கடுகை மூன்றீஸ்வரர் திருக்கோவில் நந்தவனம் தொடக்க விழா ஆட்சியர் விஷ்ணு தலைமையில் நடைபெற்றது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
பாப்பாகுடி திருக்கடுகை மூன்றீஸ்வரர் கோவிலில் நந்தவனம் மாதிரி தொடக்க விழா
X

பாப்பாகுடி அருகே திருக்கடுகை மூன்றீஸ்வரர் திருக்கோவில் நந்தவனம் தொடக்க விழா மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு தலைமையில் நடைபெற்றது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 10 திருக்கோவில்களில் மாதிரி நந்தவனம் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பை தொடர்ந்து, நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி வட்டம் பாப்பாகுடி அருகே அருள்மிகு திருக்கடுகை மூன்றீஸ்வரர் திருக்கோவில் நந்தவனம் தொடக்க விழா மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு தலைமையில் நடைபெற்றது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 100 திருக்கோவில்களில் மாதிரி நந்தவனம் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பை தொடர்ந்து, ஆலயம் தொழுவது சாலமும் நன்று என்ற பொன்மொழியை மெய்ப்பிக்கும் நோக்கில், நம் முன்னோர்கள் ஆலயம் சென்று தொழும் மக்கள் சகல நன்மையும் பெற வேண்டும் என்பதற்காகவே கோவில் பிரகாரங்களில் நந்தவனம் அமைத்தல், கோவில் சுற்றுப்புறங்களில் மரக்கன்றுகள் நட்டு பராமரித்தல், மூலிகை தோட்டங்கள் ஏற்படுத்துதல் மற்றும் தல மரக்கன்றுகள் பராமரித்தல் போன்ற பயன்படக்கூடிய செயல்களை செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் வட்டாரத்திற்கு 2 கோவில்களில் நந்தவனங்கள் உருவாக்க திட்டமிடப்பட்டு இன்று துவங்கப்பட்டுள்ளது. நந்தவனத்தில் சுத்தமான காற்று, நோயைத் தீர்க்கக் கூடிய மூலிகைகள், மன அமைதி என பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பிரதான தல மரங்களும் இந்த நந்தவனத்தில் நட்டு வளர்க்கப்பட உள்ளது, மேலும், கோவில்களில் பாரம்பரியமாக வளர்க்கப்பட்ட மரங்களும் வளர்க்கப்பட உள்ளது. அரசு, வில்வம், புளி, பூவரசு, வேங்கை, மருது, இலுப்பை, நாவல், பன்னீர், செம்மரம், சந்தனம், மந்தாரை என 40 வகையான பாரம்பரிய மரங்கள் தற்போது நடப்பட்டுள்ளன.

இந்நிகழ்ச்சியில் சேரன்மகாதேவி வருவாய் கோட்டாட்சியர் கி. சிந்து, ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை தி. சங்கர்,. பாப்பாக்குடி, வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) பாலசுப்பிரமணியன், தாசில்தார் செல்வம், செயல் அலுவலர், திருக்கடுகை மூன்றீஸ்வரர் திருக்கோவில் மு. கிருஷ்ணவேணி, மற்றும் மூத்த ஆய்வாளர், அகத்தியமலை மக்கள்சார் இயற்கைவள காப்பு மையம் மு. மதிவாணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Updated On: 11 Dec 2021 11:51 AM GMT

Related News

Latest News

 1. சினிமா
  மேக்கிங் வீடியோ வெளியிட்ட லியோ படக்குழு
 2. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சியில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்த பயிலரங்கம்
 3. தமிழ்நாடு
  ராமேஸ்வரம் கோவிலில் உள்ள ஓலைச்சுவடிகளை காட்சிப்படுத்த கோரிக்கை
 4. தமிழ்நாடு
  அவசரமாக அமித்ஷாவை சந்தித்த அண்ணாமலை: தமிழக அரசியலில் புது குழப்பம்?
 5. உடுமலைப்பேட்டை
  அணைகள் கட்ட நிதி ஒதுக்காத தமிழக அரசு; பட்ஜெட் அறிவிப்பில் விவசாயிகள்...
 6. லைஃப்ஸ்டைல்
  வீட்டை அலங்கரிக்கும் பொம்மைகள்: பராமரிப்பது எப்படி என்பது தெரியுமா?
 7. தாராபுரம்
  தாராபுரம்; திருமண நாளில், மணப்பெண் ‘எஸ்கேப்’
 8. திருப்பூர்
  திருப்பூர்; ரேஷன் கடைகளில், 5 கிலோ கேஸ் சிலிண்டர் வினியோகம்
 9. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சி மாவட்ட ஏரி, குளங்களில் சவுடு மணல் அள்ளுவதற்கு அனுமதி
 10. காஞ்சிபுரம்
  வெடி விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு முதல்வரின் நிவாரண நிதி