/* */

திருச்சியில் தூர்வாரும் பணியை இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ.ஆய்வு

திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ் இன்று மலைக்கோட்டை பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

திருச்சியில் தூர்வாரும் பணியை  இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ.ஆய்வு
X

திருச்சி மலைக்கோட்டை பகுதியில் நடந்த வாய்க்கால் தூர்வாரும் பணியை இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. முனைவர் த.இனிகோ இருதயராஜ் தொகுதிக்கு உட்பட்ட வார்டுகளில் தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறார். அதன் தொடர்ச்சியாக இன்று காலை மலைக்கோட்டை பகுதி 10-வது வார்டில் ஆய்வு ஆய்வு செய்தார்.

மழைக்காலம் வருவதை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதிகளில் உள்ள கழிவுநீர் கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி போர்க்கால அடிப்படையில் கால்வாய்களை தூர்வார வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வலியுறுத்தி கேட்டுக் கொண்டார்.

இந்த ஆய்வுகளின் போது அந்த வார்டில் உள்ள கீழ ஆண்டாள்வீதி, வடக்கு ஆண்டாள் வீதி, காளியம்மன் கோவில் தெரு, சங்கரன் பிள்ளை தெரு, பட்டர்வெர்த்ரோடு உள்ளிட்ட அனைத்து பகுதிகளில் சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது குடிநீர், மின்சாரம், தெரு விளக்கு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் குறித்து பொதுமக்கள் சொன்ன குறைகளை உடனடியாக அதிகாரிகளிடம் தெரிவித்து விரைவில் உரிய நடவடிக்க எடுக்க வலியுறுத்தினார். இதில் பகுதி செயலாளர் மதிவாணன், வட்ட செயலாளர் பாறையடி சங்கர் நிர்வாகிகள் முத்தழகு பழனி, சிவக்குமார், மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் ராஜேஷ் கண்ணா, இளநிலை பொறியாளர் பாவாபக்ருதீன், மின்வாரிய உதவி பொறியாளர் குமார், விஜயகுமார், சுகாதார ஆய்வாளர் டேவிட் முத்துராஜ், சுகாதார மேற்பார்வையாளர் முகமதுகனி, கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ண பிரியா மற்றும் பகுதி, வட்ட அனைத்து அணிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 21 Sep 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  3. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  5. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  6. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  7. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  9. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!