/* */

மதுரையில் இருந்து தூத்துக்குடிக்கு கஞ்சா கடத்திய வாலிபர் கைது

கார், பஸ், ரயிலைத் தவிர்த்துவிட்டு இரு சக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தி வந்த சம்பவம் போலீசாரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது

HIGHLIGHTS

மதுரையில் இருந்து தூத்துக்குடிக்கு கஞ்சா கடத்திய வாலிபர் கைது
X

தூத்துக்குடி அருகே கஞ்சா கடத்தியதாக கைது செய்யப்பட்ட மதுரை அலங்காநல்லூர் பகுதியை சேர்ந்த  மணிமாறன்

தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா போன்ற போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தல் போன்றவற்றை தடுப்பதற்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவுப்படி, அந்தந்த உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டுள்ளார். அதன்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு எதிரிகள் கைது செய்யப்பட்டு போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ் மேற்பார்வையில், தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) பிச்சையாபாண்டியன் தலைமையில், முதல் நிலைக் காவலர்கள் அடங்கிய தனிப்படையினர் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்ட போது தூத்துக்குடி காமராஜ் கல்லூரி அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் மதுரை அலங்காநல்லூர் பகுதியை சேர்ந்த மரகதவேல் மகன் மணிமாறன் (25) என்பதும், அவர் சட்ட விரோதமாக விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. தனிப்படையினர் மேற்படி மணிமாறனை கைது செய்து, அவரிடமிருந்து 10 ½ கிலோ கஞ்சாவையும், அதற்குப் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். இது குறித்து தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தூத்துக்குடிக்கு வெளியூரில் இருந்து இதுவரை கார், வேன், பஸ், ரயில் உள்ளிட்ட வாகனங்களில் நடந்து வந்த கஞ்சா விற்பனை, தற்போது இரு சக்கர வாகனத்தில் தொடங்கியிருப்பது போலீசாரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

Updated On: 23 Sep 2021 8:08 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!